அருமைத் தமிழ் மக்களே... இதைப் படிங்க முதல்ல....!
இன்றைய சூழ்நிலையில் ஒரு படம் 100 நாள் ஓடுவது என்பது மிகப்பெரிய விசயம். அதுவும் தேவயானி தனது கணவரை ஹீரோவாக அறிமுகம் செய்த படம் 100 நாள் ஓடியதாக யுடூயூப்பில் போட்டிருந்தார்கள்.
பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த தேவயாணி முதன் முறையாக தனது கணவர் ராஜகுமாரனுடன் ஜோடி சேர்ந்த படம் திருமதி தமிழ்.
படம் வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார் தேவயானி. அப்புறம் 600 தியேட்டர்களின் வெளியிடுவதாக அவரே அறிவிப்பு வெளியிட்டார். இதோ 100வது நாள் கொண்டாடுகிறார்கள்.

வாக்கை காப்பாத்திட்டேன்
விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன் படத் தொடக்கவிழாவில் வெற்றிப்படமாக அமையும் என்று வாழ்த்தினேன். அதேபோல் என்னுடைய வாழ்த்தை காப்பாற்றிய ராஜகுமாரனுக்கு நன்றி என்றார்.

3 நாளு ஓடுறதே…
இன்றைக்கு படங்கள் 3 நாள் ஓடுறதே பெரிய விசயம்... ஆனால் திருமதி தமிழ் 100 நாள் ஓடியது மிகப்பெரிய விசயம் என்று தன் பங்குக்கு சொல்லி வைத்தார்.

பாலிவுட்ல கூட கிடையாது
இந்த மாதிரி 100 நாள் விழா பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட்ல கூட பார்த்தது கிடையாது எல்லோரையும் கவுரப்படுத்துறாங்களே என்று சிலாகித்துப் பேசினார் சிட்டிபாபு.

பாம்பு ஆசிர்வாதம்
பட பூஜையிலேயே பாம்பு வந்து ஆசிர்வாதம் செய்தது. அது மாதிரியே திருமதி தமிழ் வெற்றிப்படமாக அமைஞ்சிருச்சே என்று தன் பங்கிற்கு சொல்லி வைத்தார் குருக்கள்.

எப்.எம் ல போடுங்கப்பா
படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஷீல்டு கொடுத்து கவுரவித்தார் ராஜகுமாரன். பிரபல எப்.எம். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ஷீல்டு வாங்க வந்திருந்தனர். அப்போது பேசிய ராஜகுமாரன், படம் 100 நாள் ஓடிருச்சி. இனியாவது எங்க பாட்டை எப்.எம் ல போடுங்கப்பா என்று அன்பு கோரிக்கை வைத்தார்.

நாங்கல்லாம் யூத்
பேச்சோடு பேச்சாக நாங்கெல்லாம் யூத் என்று கூறினார். அதோடு மேக் அப் ரகசியம் பற்றிய கூறினார். அதுவும் கிளாமராகத்தான் இருக்கிறது என்று கூறினார் குருக்கள்.

எப்படிப்பா படம் ஓடிச்சு
ஆனால் விழா முடியும் வரை படம் எந்த தியேட்டரில், எத்தனை தியேட்டரில் 100 நாள் ஓடியது என்ற ரகசியத்தை மட்டும் தேவயானியோ, ராஜகுமாரனோ சொல்லவே இல்லை.


Click it and Unblock the Notifications











