மோகன் ஜியா யாரு அவரு?.. பகாசூரன் குறித்து திருமாவளவன் நெத்தியடி பதில்
சென்னை: பகாசூரன் படம் குறித்தும், அந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ஜி குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. முதல் படம் பெரிதாக எந்த கவனத்தையும் ஈர்க்கவில்லை. இதனையடுத்து அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷியை வைத்து திரௌபதி என்ற படத்தை இயக்கினார்.

பெரும் சர்ச்சையான திரௌபதி
இந்தப் படம் வெளியானபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடக காதலை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் காதல் செய்வதை தவறு என மோகன் ஜி கூறுகிறார் என பலர் விமர்சனத்தை முன்வைத்தனர். அதேபோல் படம் வெளியாகி சில வருடங்களுக்கு பிறகு பேட்டியளித்த அந்தப் படத்தின் நடிகை ஷீலா ராஜ்குமார், 'திரௌபதி படத்தில் நடித்தது கெட்ட கனவு. அந்தப் படத்தின் இயக்குநர் முழு கதையையும் என்னிடம் சொல்லவில்லை. இயக்குநர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது' என தனது குமுறலை கொட்டியிருந்தார்.

சர்ச்சையில் ருத்ரதாண்டவம் ஆடிய மோகன் ஜி
திரௌபதி படத்துக்கு பிறகு ருத்ர்தாண்டவம் படத்தை இயக்கினார் மோகன் ஜி. இந்தப் படமும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது; சிறுபான்மையின மதத்தினர் மீது வன்மம் கக்கப்பட்டிருக்கிறது என பல விமர்சனங்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பல இடங்களில் வேண்டுமென்றே சீண்டியிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதையெல்லாம் மோகன் ஜி மறுத்துவந்தார்.

திருமாவிடம் கேள்வி
இதனையடுத்து மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் சமீபத்தில் வெளியான சூழலில் இரும்பன் படத்தை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். அப்போது, 'பகாசூரன் படம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு மட்டும் பிடிக்கவில்லை என கூறியிருக்கிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.

திருமாவளவன் சொன்ன பதில்
அதற்கு பதிலளித்த திருமாவளவன், "நாங்கள் யாரும் பகாசூரன் படத்தையே பார்க்கவில்லை. மோகன் ஜி யார் என்றே எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் என நீங்கள் பெயர் சொல்லிய பிறகுதான் தெரியும். அதனால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை." என்றார்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், “நாங்கள் யாரும் பகாசூரன் படத்தையே பார்க்கவில்லை. மோகன் ஜி யார் என்றே எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் என நீங்கள் பெயர் சொல்லிய பிறகுதான் தெரியும். அதனால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.
முன்னதாக, பகாசூரன் படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும் சில செயலிகள் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாக மோகன் ஜி கூறினார். ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











