twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆக்ஷன் ஹீரோவானார் திருமாவளவன்! சினிமாவிலிருந்து நிறையப் பேர் அரசியலுக்குப் போயுள்ளார்கள். அவர்களில் சிலர் வாழ்ந்துள்ளார்கள், பலர் வீழ்ந்துள்ளார்கள்.சினிமாவிலிருந்து அரசியலுக்கு நடிகர்கள் தாவுவது போல அரசியல்வாதிகளும் அவ்வப்போது கேம்ப் மாறி சினிமாவில்நடிப்பதுண்டு. முன்பு ராமதாஸ் ஒரு படத்தில் நடித்தார், திருநாவுக்கரசர் ஹீரோவாக நடித்து கலக்கினார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.அன்பரசு கூட ஒரு படத்தில் தலை காட்டினார். அந்த வரிசையில் இப்போது திருமாவளவனும் சேர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் என்ற படு ஸ்ட்ராங்கான தலித் கட்சியின் தலைவராக இருக்கும் திருமாவளவன், அன்புத்தோழி என்றபடத்தில் புரட்சிவாதியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கையில் துப்பாக்கி ஏந்திப் போராடும் மாவீரனாக சத்தம் இல்லாமல்நடித்து வருகிறார். தலையில் தொப்பியுடன் போராளி உடையில் படு கச்சிதமாக வேடத்தில் பொருந்தியுள்ளார் திருமாவளவன். சென்னை அருகேதிரிசூலம் மலைப் பகுதியில் திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் கடந்த சில நாட்களாக நடந்த படப்பிடிப்பின்போது சுடப்பட்டுள்ளன. நாலாபுறமும் குண்டுகள் வெடித்துச் சிதற, அந்த குண்டுகளுக்கு மத்தியிலிருந்து, கையில் துப்பாக்கியுடன் திருமாவளவன்தாவிக் குதித்து வெளியே வருவது போலவும், மலை உச்சிக்கு கயிற்றைப் பிடித்தபடி திருமாவளவன் ஏறுவதும், வீராவேசமாகவசனம் பேசுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்புக்காக ஆலந்தூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து நடித்துக் கொடுத்து வருகிறார் திருமா. படத்தில்நடிப்பது குறித்து திருமா கூறுகையில்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் வீரனாக இப்படத்தில் வருகிறேன். எனது கனவு சினிமாவில் நடிப்பதல்ல. தமிழ் மக்களை ஒருமைப்படுத்தும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது தான்.அது இதுவரை நனவாகவில்லை. ஆனால் அக்குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் படத்தில் எனது கேரக்டர் உள்ளது. சின்ன வயதிலிருந்தே சினிமாவை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இப்போது என்னையும் நடிக்க வைத்துள்ளார்கள்.நண்பர்களுக்காக நான் நடிக்கிறேன். நட்புக்காக நடித்தாலும் கூட, எனது கொள்கை முழக்கத்திற்கு ஒத்துவருவது போன்றகேரக்டர் என்பதால் விருப்பப்பட்டு நடிக்கிறேன் என்றார் திருமா. அன்புத்தோழி படத்தின் இயக்குனர் கிருபா, திருமாவளவனின் நடிப்பு குறித்துக் கூறுகையில், அரசியல் தலைவர் போலவேஎங்களிடம் திருமாவளவன் நடந்து கொள்ளவில்லை. ரொம்பவும் எளிமையாக உள்ளார். நல்ல நடிகராக இருக்கிறார். கால்ஷீட் கொடுத்து அதற்கேற்ப வந்து நடித்துக் கொடுக்கிறார். இயக்குனர் அகத்தியனின் மகள் செளமியா தான் இப்படத்தின்நாயகி. இப்படத்தில் பாடல், நடனம் என மசாலாக்கள் எதுவும் கிடையாது. ஒரு தலையாக ஹீரோ மீது காதல் கொள்ளும் நாயகி, பின்னர் அவரது அன்புத் தோழியாக மாறுவது தான் கதை. கிளைமாக்ஸ்காட்சி பரபரப்பாக பேசப்படும். அதில் திருமாவளவனுடன், ஏராளமான விடுதலைச் சிறுத்தை தொண்டர்களும் நடிக்கிறார்கள்என்றார் கிருபா. மேடையில் முழங்கிய திருமாவை, வெள்ளித் திரையில் காணப்போகும் நாளை விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்லாது தமிழ்மக்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

    By Staff
    |

    சினிமாவிலிருந்து நிறையப் பேர் அரசியலுக்குப் போயுள்ளார்கள். அவர்களில் சிலர் வாழ்ந்துள்ளார்கள், பலர் வீழ்ந்துள்ளார்கள்.சினிமாவிலிருந்து அரசியலுக்கு நடிகர்கள் தாவுவது போல அரசியல்வாதிகளும் அவ்வப்போது கேம்ப் மாறி சினிமாவில்நடிப்பதுண்டு.

    முன்பு ராமதாஸ் ஒரு படத்தில் நடித்தார், திருநாவுக்கரசர் ஹீரோவாக நடித்து கலக்கினார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.அன்பரசு கூட ஒரு படத்தில் தலை காட்டினார். அந்த வரிசையில் இப்போது திருமாவளவனும் சேர்ந்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் என்ற படு ஸ்ட்ராங்கான தலித் கட்சியின் தலைவராக இருக்கும் திருமாவளவன், அன்புத்தோழி என்றபடத்தில் புரட்சிவாதியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கையில் துப்பாக்கி ஏந்திப் போராடும் மாவீரனாக சத்தம் இல்லாமல்நடித்து வருகிறார்.

    தலையில் தொப்பியுடன் போராளி உடையில் படு கச்சிதமாக வேடத்தில் பொருந்தியுள்ளார் திருமாவளவன். சென்னை அருகேதிரிசூலம் மலைப் பகுதியில் திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் கடந்த சில நாட்களாக நடந்த படப்பிடிப்பின்போது சுடப்பட்டுள்ளன.


    நாலாபுறமும் குண்டுகள் வெடித்துச் சிதற, அந்த குண்டுகளுக்கு மத்தியிலிருந்து, கையில் துப்பாக்கியுடன் திருமாவளவன்தாவிக் குதித்து வெளியே வருவது போலவும், மலை உச்சிக்கு கயிற்றைப் பிடித்தபடி திருமாவளவன் ஏறுவதும், வீராவேசமாகவசனம் பேசுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

    இந்தப் படப்பிடிப்புக்காக ஆலந்தூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து நடித்துக் கொடுத்து வருகிறார் திருமா. படத்தில்நடிப்பது குறித்து திருமா கூறுகையில்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் வீரனாக இப்படத்தில் வருகிறேன்.

    எனது கனவு சினிமாவில் நடிப்பதல்ல. தமிழ் மக்களை ஒருமைப்படுத்தும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது தான்.அது இதுவரை நனவாகவில்லை. ஆனால் அக்குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் படத்தில் எனது கேரக்டர் உள்ளது.

    சின்ன வயதிலிருந்தே சினிமாவை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இப்போது என்னையும் நடிக்க வைத்துள்ளார்கள்.நண்பர்களுக்காக நான் நடிக்கிறேன். நட்புக்காக நடித்தாலும் கூட, எனது கொள்கை முழக்கத்திற்கு ஒத்துவருவது போன்றகேரக்டர் என்பதால் விருப்பப்பட்டு நடிக்கிறேன் என்றார் திருமா.


    அன்புத்தோழி படத்தின் இயக்குனர் கிருபா, திருமாவளவனின் நடிப்பு குறித்துக் கூறுகையில், அரசியல் தலைவர் போலவேஎங்களிடம் திருமாவளவன் நடந்து கொள்ளவில்லை. ரொம்பவும் எளிமையாக உள்ளார். நல்ல நடிகராக இருக்கிறார்.

    கால்ஷீட் கொடுத்து அதற்கேற்ப வந்து நடித்துக் கொடுக்கிறார். இயக்குனர் அகத்தியனின் மகள் செளமியா தான் இப்படத்தின்நாயகி. இப்படத்தில் பாடல், நடனம் என மசாலாக்கள் எதுவும் கிடையாது.

    ஒரு தலையாக ஹீரோ மீது காதல் கொள்ளும் நாயகி, பின்னர் அவரது அன்புத் தோழியாக மாறுவது தான் கதை. கிளைமாக்ஸ்காட்சி பரபரப்பாக பேசப்படும். அதில் திருமாவளவனுடன், ஏராளமான விடுதலைச் சிறுத்தை தொண்டர்களும் நடிக்கிறார்கள்என்றார் கிருபா.

    மேடையில் முழங்கிய திருமாவை, வெள்ளித் திரையில் காணப்போகும் நாளை விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்லாது தமிழ்மக்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X