மீண்டும் இணையும் பரத் - வடிவேலு - திருமுருகன்

By Sudha

எம் மகன் என்ற வெற்றிப் படத்திற்குப் பின்னர் மீண்டும் பரத் - வடிவேலுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் திருமுருகன்.

பரத், வடிவேலுவின் கலக்கல் நடிப்பிலும், காமெடியிலும், பெரும் வெற்றி பெற்ற படம் எம் மகன்.

இந்தப் படத்திற்குப் பின்னர் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தை இதே நடிகர்களுடன் வைத்து இயக்கினார் திருமுருகன். தற்போது 3வது முறையாக இதே கலைஞர்களுடன் இணைந்து புதிய படத்தை இயக்கக் களம் இறங்குகிறார்.

நாதஸ்வரம் தொடர்

நாதஸ்வரம் தொடர்

தற்போது திருமுருகன் சன் டிவியில் நாதஸ்வரம் மெகா தொடரை இயக்கி அதில் நடித்தும் கொண்டிருக்கிறார்.

தேனிலவு

தேனிலவு

அதேபோல அவரது திரு பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேனிலவு தொடரிலும் அவர் நடிக்கிறார். இயக்க மேற்பார்வையையும் கவனிக்கிறார்.

மீண்டும் திரைப்படம்

மீண்டும் திரைப்படம்

இந்த நிலையில் தனது 3வது திரைப்படத்திற்காக மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகிறார் திருமுருகன்.

குடும்பக் கதை- காமெடி கலந்து

குடும்பக் கதை- காமெடி கலந்து

இதுவும் வழக்கம் போல குடும்பக் கதைதான். கூடவே காமெடிக்கும் முக்கியத்துவம் தருகிறார் திருமுருகன்.

இப்படத்திற்கும் புகழ் கிடைக்கும்

இப்படத்திற்கும் புகழ் கிடைக்கும்

இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறுகையில், மெட்டி ஒலி மூலம் எனக்கு கிடைத்த புகழ் எம் மகன் படத்திற்கும் கிடைத்தது. அது மாதிரி இப்போது நாதஸ்வரம் தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்த இயக்கவிருக்கும் படத்திற்க்கும் கிடைக்கும் என்றார்.

பரத் - வடிவேலு

பரத் - வடிவேலு

நாயகனாக பரத் நடிக்கிறார். காமெடியுடன் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். தொழில்நுட்ப்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X