சென்சாரில் திருநாள்... யுஏ சான்று பெற்றது
பிஎஸ் ராம்நாத் இயக்கத்தில் ஜீவா - நயன்தாரா நடித்துள்ள திருநாள் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று கிடைத்துள்ளது.
போக்கிரி ராஜா படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜீவாவின் புதிய படம் திருநாள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்துக்குப் பிறகு ராம்நாத் இயக்கியுள்ள படம் இது.
இதில் ஜீவாவிற்கு ஜோடியாக பத்து வருடத்திற்குப் பிறகு நயன்தாரா நடித்துள்ளார். கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, படத்திற்கான பின்னணி வேலைகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
படம் இப்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், படம் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











