முழுக்க முழுக்க அரபு நாடுகளில் படமாக்கப்பட்ட 'திருந்துடா காதல் திருடா'!

By Shankar

ஏதோ ஒரு வழியில் அரபு நாடுகளுக்குப் போய் செட்டிலாகும் இந்தியர்களை மையப்படுத்தி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். படத்துக்குப் பெயர் 'திருந்துடா காதல் திருடா'.

இந்தப் படத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா...

படத்தை முழுக்க முழுக்க அரபு நாடுகளில் மட்டுமே படமாக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நடித்துள்ள அத்தனை பேருமே துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் செட்டிலான தமிழர் - மலையாளிகள்தான்.

அசோக் ஆர் நாத்

அசோக் ஆர் நாத்

மலையாளத்தில் மோகன்லால், பாலசந்திர மேனன், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிய அசோக் ஆர் நாத், திருந்துடா காதல் திருடா மூலம் தமிழுக்கு வருகிறார்.

மலையாளத்தில் வெளியான ‘ஷபவம்' திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர் அசோக் ஆர்.நாத்.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

இதில் நாயகனாக ஆதில் இப்ராஹிம், நாயகியாக சுதக்‌ஷனா அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் சஜீவ் பாஸ்கர், பிரவீன் இராமசந்திரன், கோப்ஸ், சூரியபிரகாஷ், ஃபெனல் டிசில்வா, மாஸ்டர் ஆதித்திய ஹரி, சுமிதா பாபு, ஷிக்க ஹரிலால், பேபி டயான நவமி, ஒல்காகோவல்ச்சக், மலையாள முன்னணி நடிகர்களான முகேஷ், கொச்சு பிரேமன் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரபு நாட்டில் நேர்முகத் தேர்வு

அரபு நாட்டில் நேர்முகத் தேர்வு

படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "ஒரு இளம் பெண்ணின் வித்தியாசமான போராட்டம் தான் ‘திருந்துடா காதல் திருடா' படத்தின் கதை. இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை பார்க்க சென்றவர்கள். அவர்களுக்காக அங்கே ஒரு நேர்முக தேர்வு நடத்தினோம். அதில் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். அதில் 40 பேரை மட்டும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளோம்.

இப்படத்தின் நாயகன் அங்குள்ள தமிழ் எப்.எம்.ல் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்தார். இந்த படத்திலும் அவர் ரேடியோ ஜாக்கியாகவே நடிக்கிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்த படத்தை துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல்-குவைன், ஃயூஜேரா போன்ற அரபு நாடுகளில் 60 நாட்கள் படமாக்கியுள்ளோம். அதில் ராசல்கைமா என்ற இடத்தில் மட்டும் 25 நாட்கள் படமாக்கினோம். அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத அந்த ஊரில் ரொம்பவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்தை மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம்," என்றார்.

இப்படத்திற்கு சணல் தோட்டம் ஒளிப்பதிவு செய்கிறார். ரஞ்ஜித் மேலேபாட் இசையமைக்கிறார். நியூ டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X