twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டுப்பயலே 2 - சமூகவலைத்தள வில்லன்களிடம் ஜாக்கிரதை பெண்களே!

    பெண்களைகளை கீழ்த்தரமாக கூறும் ஃபேஸ்புக் பேஜ்களுக்குசெருப்படி திருட்டுப்பயலே 2 என்று சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

    By Mayura Akilan
    |

    சென்னை: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களினால் வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்தி திருட்டுப்பயலே 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஹிட் கொடுத்த படம் திருட்டுப்பயலே. கள்ளக்காதலை படம் பிடித்து மிரட்டி பணம் பறிக்கும் நபரைப் பற்றிய கதை. தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை அவரே இயக்கியுள்ளார். முதல்பாகத்திற்கும் 2பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரச்சன்னா, அமலா பால், விவேக், ரோபோ சங்கர், சனம் ஷெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ப்ரமோவை வைத்தே இந்த படத்தை புரிந்து கொள்ளலாம்.

    சமூக வலைத்தள தவறுகள்

    சமூக வலைத்தள தவறுகள்

    கடந்த சில மாதங்களுக்கு முகநூல் நட்பு மூலம் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இளைஞர். அப்போது மனைவியை கொன்றது ஏன் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். திருட்டுப்பயலே 2 படமும்
    சமூக வலைதளங்களினால் வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம்தான்.

    என்னா படம்பா

    பெண்களைகளை கீழ்த்தரமாக கூறும் ஃபேஸ்புக் பேஜ்களுக்கு செருப்படி திருட்டுப்பயலே 2

    பெண்களே கவனம்

    திருட்டுப்பயலே 2 பார்ப்பவர்கள் இனி போனில் பேசும் போது மிகவும் கவனமாகவும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கவனமாகவும் இருக்க வாய்ப்புள்ளது

    சாமி ஏத்துக்குதே

    சாமி ஏத்துக்குதே

    வீட்டில் சமையல் செய்து கொண்டே பிரசன்னாவிடம் ஆன்லைனில் உரையாடும் அமலாபால், சமைத்த உணவை எடுத்து காட்டிக்கொண்டே பேசுவது இன்றைக்கும் பல இடங்களில் நடக்கிறது. 'கம்ப்யூட்டர்ல எப்படி வாசனை வரும்? என்று அமலாபால் கேட்க... கடவுளுக்கு நைவேத்தியம் இப்படிதானே பண்றாங்க, சாமி ஏத்துக்குறதில்லையா என்ற பிரசன்னாவில் பதில் சூப்பர் ரகம்.

    படம் ஒரு பாடம்

    படம் ஒரு பாடம்

    உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன், உன் அப்பா மாப்பிள்ளை தேடுறார், நீ ஒரு ஃப்ரெண்டைத் தேடுற என்று அமலாபாலிடம் வசனம் பேசும் பாபி சிம்ஹா அட்டகாசம். தொலைக்காட்சி விளம்பரங்களில் இது முன்னிலைப்படுத்தப்படுகிறது. வீட்டில் கணவன் இருந்தாலும் அவர் வேலைக்கு சென்ற பின்னர் தனது தனிமையை மறக்க பிற ஆண்களிடம் ஆன்லைனின், தொலைபேசியில் பேசும் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு பாடம் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிவிடுகின்றனர்.

    English summary
    Thiruttu payale 2 movie the kind of wrongdoing youngsters indulge on social media is incredible.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X