Just In
- 22 min ago
பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!
- 1 hr ago
அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. "போடாதே போடாதே"... பதறிப் போன மகள் சாரா!
- 1 hr ago
இது என்ன.. இப்படியும் இல்ல அப்படியும் இல்ல.. யாஷிகாவின் டிரெஸ்ஸால் தலைசுற்றிப்போன நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
சித்துவை நெனச்சு நெனச்சு.. விடிய விடிய போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. செம வைரல்
Don't Miss!
- Sports
இது ஆஷஸ்-ஐ விட முக்கியமானது...ரொட்டேஷன் பாலிசி தேவையா..இங்கிலாந்துக்கு முன்னாள் வீரர் சரமாரி கேள்வி
- Finance
சாமனியர்களுக்காக ஒலித்த குரல்.. தமிழகத்தின் தோழர் தா.பாண்டியன்.. பெரும் இழப்பு..!
- Automobiles
கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட்!! ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...
- News
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் "ஜாக்பாட்".. ஆனந்தத்தில் மக்கள்
- Lifestyle
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா.. பதறிப் போன ரசிகர்கள்.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
சென்னை: நடிகை மாளவிகா விபத்தில் சிக்கியதாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது.
சந்திரமுகி, திருட்டுப் பயலே உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை மாளவிகா சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் இப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
நடிகை மாளவிகாவுக்கு விபத்து ஏற்பட்டது என்கிற செய்தி அறிந்த ஏகப்பட்ட ரசிகர்கள் பதறிப் போய் என்ன ஆச்சுங்க என அவரிடமே நலம் விசாரித்து வருகின்றனர்.

ஸ்வேதா கொன்னூர் மேனன்
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 1979ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி பிறந்தவர் நடிகை மாளவிகா. அவரது உண்மையான பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன். அதே பெயரில் தான் இன்னமும் இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறார். 41 வயதிலும் அதே கவர்ச்சி மாறாமல் இருந்து வருகிறார் மாளவிகா.

அஜித்துக்கு ஜோடியாக
1999ம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் தல அஜித் நடித்த உன்னைத் தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. தொடர்ந்து, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக் கொடிகட்டு என ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
பார்த்திபன் மற்றும் முரளி நடிப்பில் இயக்குநர் சேரன் இயக்கிய வெற்றிக் கொடி படத்தில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகவே மாறியது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலுக்கு அப்படியொரு அசத்தல் நடனம் ஆடிய மாளவிகாவை 90ஸ் கிட்ஸ் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

கிளாமர் பக்கம்
ஹீரோயினாக கலக்கி வந்த மாளவிகா தனது மார்க்கெட் சற்றே சரிய தொடங்கியதை அறிந்ததும் கிளாமர் பக்கத்துக்கு தாவினார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், சித்திரம் பேசுதடி திருட்டுப் பயலே, வியாபாரி, நான் அவனில்லை, மச்சக்காரன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சியை காட்டி கலங்கடித்தார்.

சினிமாவிலிருந்து விலகல்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா, கடைசியாக 2009ம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திருமணமாகி செட்டில் ஆன நிலையில், அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கடந்து விட்டது.

விபத்தில் சிக்கினேன்
சினிமாவை விட்டு விலகினாலும் தொடர்ந்து தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கனெக்ட்டில் இருக்கும் நடிகை மாளவிகா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கினேன் என போட்டோவுடன் போட்டு ரசிகர்களை பதற செய்துள்ளார். சைக்கிள் பயிற்சியை மேற்கொண்ட போது கீழே விழுந்ததில் தனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

நான் ஒரு போராளி
மேலும், அந்த கேப்ஷனில் தான் ஒரு போராளி என்றும் சீக்கிரமே சரியாகி வருவேன் என்றும் பதிவிட்டுள்ள மாளவிகாவிடம் எந்த விரலில் அடிபட்டது என ரசிகர் ஒருவர் கூடுதல் அக்கறையுடன் விசாரிக்க வலது கை மோதிர விரலில் அடிபட்டது என்று பதிலளித்துள்ளார். சீக்கிரமே உங்கள் விரல் குணமாக பிரார்த்தனை செய்கிறோம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். (புறாவுக்கு போரா.. ஒரே அக்கப் போரா இருக்கே)!