twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரம்மாண்ட இந்தியன்

    By
    |

    சென்னை: ஷங்கர் இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'இந்தியனு'க்கு, ஹீரோ சாய்ஸில் முதலில் இருந்தவர், அந்த பிரபல ஹீரோ!

    சினிமாவில் நினைப்பது ஒன்றும் நடப்பது வேறாகவும் இருப்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

    அவர் நடிக்க வேண்டிய படத்தில் இவரும், இவர் நடிக்க வேண்டிய படத்தில் அவரும் நடிப்பது சர்வ சாதாரணமாக நடந்திருக்கும்.

    அந்த இடத்தில் டாட்டூ.. கையில் கிதார்.. காதல்ல விழுந்துட்டீங்களா? பிரபல ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்அந்த இடத்தில் டாட்டூ.. கையில் கிதார்.. காதல்ல விழுந்துட்டீங்களா? பிரபல ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்

    நட்சத்திர பட்டாளம்

    நட்சத்திர பட்டாளம்

    ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த படம், 'இந்தியன்'. மணிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் ஆகிய பாலிவுட் ஹீரோயின்களுடன் நம்மூர் சுகன்யாவும் 'கமல்'களுக்கு ஜோடி. கஸ்தூரி, நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளம். சுஜாதாவின் வசனம், ஏ.ஆர்.ரகுமானின் இசை என 'இந்தியன்' பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது, படம் வெளியானபோது.

    இந்தியன் தத்தா

    இந்தியன் தத்தா

    1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், இந்தியன் தாத்தா கேரக்டர் எப்போதும் பேசப்படும் ஒன்று. ஏனென்றால் லஞ்சம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. இந்தியன் தாத்தா இவர்களை கேள்விகேட்க மாட்டாரா என்கிற ஏக்கத்தை தவிர்க்கப் போவதுமில்லை. அப்படி ஒரு அழுத்தமான கேரக்டர் அது.

    அப்படியொரு அசத்தல்

    அப்படியொரு அசத்தல்

    இந்தியன் தாத்தாவின், ஹேர்ஸ்டைலில் இருந்து அவர் கைவிரல்களை நீட்டி மடக்கும் ஸ்டைலும் காலால் மிதிக்கும் வேகமும் அப்படியொரு அசத்தல். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பெரிய பலமே, இந்த கேரக்டர்தான். அந்த கேரக்டருக்கு எப்போதும் உயிர் இருக்கிறது என்பதால்தான் இப்போது இரண்டாம் பாகம் உருவாகிறது.

    முதல் சாய்ஸ்

    முதல் சாய்ஸ்

    ஜென்டில்மேன், காதலன் படங்களுக்குப் பிறகு இது மூன்றாவது படம் இயக்குனர் ஷங்கருக்கு. இதில் முதலில் நடிக்க இருந்தது கார்த்திக். அவர்தான் முதல் சாய்ஸ். அவருக்காகத்தான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தார் ஷங்கர். இதற்கிடையே கமலிடம் இந்தக் கதையை கேட்குமாறு கூறியிருந்தார்.

    கூட்டணியில் நடிப்பாரா?

    கூட்டணியில் நடிப்பாரா?

    அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது ஷங்கருக்கு. ஏனென்றால், ஏ.எம்.ரத்னம் அப்போது புது தயாரிப்பாளர். இயக்குனர் ஷங்கர் 2 படங்களை முடித்திருந்தாலும் புது இயக்குனர்தான். அதனால், கமல்ஹாசன் அவர்கள் கூட்டணியில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
    ஆனால், கதையை கேட்ட கமல் ஓகே, சொல்ல, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் இயக்குனர் ஷங்கரும் ஹேப்பி.

    நவரச நாயகன்

    நவரச நாயகன்

    பிறகு தொடங்கியது படம். இதே போலதான் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேனும். அந்தக் கதையையும் ஷங்கர், நவரச நாயகன் கார்த்திக்கை மனதில் வைத்துதான் எழுதினார். ஆனால், அப்போது கார்த்திக் பிசியோ பிசி. அவர் நடித்த படங்கள் தொடர் ஹிட்டாக, நிற்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

    அர்ஜுனுக்கு மாறியது

    அர்ஜுனுக்கு மாறியது

    ஆனால், 'ஜென்டில்மேன்' கதையை கேட்ட நடிகர் கார்த்திக், தொடர்ந்து படங்கள் இருக்கு, ஒரு வருஷம் காத்திருக்க முடியுமா? என்று கேட்டார் ஷங்கரிடம். பிறகு சரத்குமார் நடிப்பதாக இருந்து, அர்ஜுனுக்கு மாறியது அந்தப் படம். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது தெரிந்ததுதானே!

    English summary
    This actor was first choice for shankar's 'Indian' film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X