அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா?
மும்பை : பாலிவுட்டில் ரிலீசான மிகச் சிறந்த அதிரடி ஆக்ஷன் படம் என்றால் அது தூம் தான். அதிரடி ஆக்ஷன், விறுவிறு திருப்பங்கள், நடனம், இசை, கண்ணை கவரும் காட்சிகள் என அனைத்து வகையிலும் ரசிகர்களை கவர்ந்த படம் தூம்.

இதனை உண்மையாக்கும் விதமாக தூம் படத்தின் 3 பாகங்களும் சூப்பர் ஹிட்டாகின. இதனால் இதன் அடுத்த பாகமும் தயாரிக்கப்பட உள்ளது. முந்தைய பாகங்களை விட இன்னும் சுவாரஸ்யமாக இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் முக்கிய வேடங்களில் அபிஷேக் பச்சனும், உதய் சோப்ராவும் நடிக்க உள்ளனர். இவர்களுக்கான ஜோடிகளை தேடி வேலை மும்முரமாக நடந்து வருகிறது. இருந்தாலும் இப்படத்தில் மிக முக்கிய கேரக்டரில் தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
ஆனால் தீபிகா வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. இப்போது வரை அவரின் கால்ஷீட் ஒத்து வராததால், அவரின் பதிலுக்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது.
தூம் முதல் பாகத்தில் வில்லனாக ஜான் ஆப்ரஹாம் நடித்தார். தூம் 2 ல் ஹிருத்திக் ரோஷனும், தூம் 3 ல் அமீர் கானும் நடித்தனர். தற்போது புதிய முயற்சியாக தூம் 4 ல் வில்லனுக்கு பதில் வில்லியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வில்லன்களாக டாப் ஹீரோக்களை நடிக்க வைத்ததை போன்று, இந்த முறை வில்லியாக டாப் ஹீரோயினான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தான் முயற்சி நடந்து வருகிறது. தீபிகாவிடம் கால்ஷீட் கிடைக்காவிட்டால் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











