இந்தியன் 2வில் சுகன்யா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா?

Recommended Video

60 years of Kamal Hassan | Ungal Naan | Shankar | Rajinikanth | Indian 2

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சுகன்யாவின் கதாபாத்திரத்தில் நடிகை காஜல் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவின. ஆனால், காஜல் அகர்வால் சுகன்யா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் நான் நிகழ்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மேலும் பல சுவாரஸ்ய தகவல் வெளியாகும் என தெரிகிறது.

அறுவை சிகிச்சை

உங்கள் நான் நிகழ்ச்சியை தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிற்கு கமல் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம், எதிர்பாரா விதமாக கமலுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கம்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை தான் நாளை நடைபெறுகிறது. அதற்கு பின் சில வாரங்கள் ஓய்வில் இருந்து விட்டு, இந்தியன் 2 ஷூட்டிங்கிற்கு கமல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மணிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான இந்தியன் படம் தேசிய விருது பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2ம் பாகம் திரைப்படம் 23 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

காஜல் இல்லை

காஜல் இல்லை

கமல்ஹாசனுக்கு நாயகியாக காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இணைந்ததில் இருந்து சுகன்யா நடித்த அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவின. மேலும், காஜல் அகர்வால் 85 வயது பாட்டி வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதும் அது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதனை காஜல் சமீபத்திய பேட்டி ஒன்றில் மறுத்தார். மேலும், களரி பயிற்சியை காஜல் கற்று வருவதால், அமைதியே உருவான அமிர்தவள்ளியாக அவர் நடிக்க வில்லை என்பது தெளிவானது.

யார் தான்

யார் தான்

காஜல் அகர்வால் சுகன்யா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால், அப்போ, யார் தான் அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் நடிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் கமல்ஹாசனை வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்து போனதாக, நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்த நிலையில், அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் அவர் தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X