குலுங்கி குலுங்கி அழுத ஜூலி.. ஆறுதல் கூறிய ஓவியா.. மறக்க முடியுமா அந்த 5 நிமிஷத்த? மிஸ் யூ ஓவியா!

சென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் ஜூலி மற்றவர்களால் குலுங்கி குலுங்கி அழுததையும் அப்போது ஆறுதல் கூறிய ஓவியாவுக்கு ஜூலி ரிவிட் அடித்ததும்தான் தற்போதைய பிக்பாஸை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது.

இந்தியில் பெறும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டது. முதல் சீசன் எதிர்பார்த்தது போல் ஹிட்டாக இரண்டாவது சீசனும் தொடங்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அழுகாச்சி எபிசோடாகவே உள்ளது.

சோகத்தில் பிக்பாஸ் வீடு

சோகத்தில் பிக்பாஸ் வீடு

ஒரு டாஸ்க்கை வைத்து மூன்று நாட்களாக ஒப்பேத்தி வருகிறார் பிக்பாஸ். ஹவுஸ் மேட்ஸ் தாங்கள் சந்தித்த துயர சம்பவங்களை சக ஹவுஸ்மேட்ஸ் உடன் பகிர்ந்து வருகின்றனர். கலங்க வைக்கும் அவர்களின் கதைகளை கேட்டு பிக்பாஸ் வீடே சோகத்தில் முழ்கியுள்ளது.

முதல் சீசனில் நடந்த சம்பவம்

முதல் சீசனில் நடந்த சம்பவம்

கடந்த சீசன்களில் இதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடைபெறவில்லை. ஆனால் முதல் சீசனில் நடந்த ஒன்று தற்போது ஞாபகத்துக்கு வருகிறது.

குலுங்கி குலுங்கி அழுத ஜூலி

குலுங்கி குலுங்கி அழுத ஜூலி

அதாவது சக குடும்பத்தினாரால் முதலில் கார்னர் செய்யப்பட்ட ஜூலிக்கு ஓவியாதான் ஆறுதல் கூறினார். காயத்ரி உள்ளிட்டோர் திட்டியதால் பெட்டில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதார் ஜூலி. அப்போது யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை.

சமாதானப்படுத்திய ஓவியா

சமாதானப்படுத்திய ஓவியா

ஆனால் ஓவியா மட்டும்தான் கதறிய ஜூலிக்கு ஆறுதல் கூறினார். ஓவியா குறித்து பலமுறை ஜூலி புரணி பேசியபோதும், அவரிடம் சண்டை போட்ட போதும் கூட ஓவியாதான் ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தினார்.

பிளேட்டை மாற்றிய ஜூலி

பிளேட்டை மாற்றிய ஜூலி

ஆனால் அதையே ஓவியாவுக்கு திருப்பி போட்டு ரிவிட் வைத்தார் ஜூலி. மற்றவர்களை பற்றி குறைகளை கொட்டியது ஜூலி, ஆனால் ஓவியாதான் அப்படி கூறினார் என பிளேட்டையே மாற்றிபோட்டு, ஓவியாவுக்கு எதிராக பிக்பாஸ் வீட்டை திருப்பினார்.

எங்கள் கேமரா படம் பிடிக்கவில்லை

எங்கள் கேமரா படம் பிடிக்கவில்லை

இதனை குறும்படமாக கமல்ஹாசன் தோலுரிக்க, இதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி உள்ள வீடியோவை ஒளிபரப்புங்க ஓவியா, எனக்கு ஏத்தி விட்டதை நிரூப்பிக்கிறேன் என கமலுக்கே சவால் விட்டார் ஜூலி. ஆனால் அப்படி எந்தக்காட்சியையும் எங்கள் கேமரா படம் பிடிக்கவில்லை என கூறி மூக்கை உடைத்தார் கமல்.

மன அழுத்தத்தில் ஓவியா

மன அழுத்தத்தில் ஓவியா

ஓவியா ஆறுதல் கூறியது, ஜூலி ரிவிட் அடித்தது என எல்லாம் குறும்படமாக ஒளிபரப்பாக அதிர்ச்சியடைந்து, ஜூலியை அடிக்க பாய்ந்தார் ஓவியா. கடைசியில் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஓவியா.

மிஸ் யூ ஓவியா

மிஸ் யூ ஓவியா

ஓவியா பிக்பாஸ் வீட்டில் நீடித்திருந்தால் அவர்தான் டைட்டில் வின்னராக இருந்திருப்பார். ஆனால் அவரை மனதளவில் டார்ச்சர் செய்து அழுத்தத்திற்கு ஆளாக்கியதில் ஜூலிக்கு பெரும் பங்கு இருந்ததை மறுக்கவும் முடியாது.. மறக்கவும் முடியாது.. மிஸ் யூ ஓவியா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X