புது காதலருடன் கொண்டாடிய பர்த் டே ரொம்ப ஸ்பெஷலாமே.. ஸ்ருதிஹாசன் சொல்றதை பாருங்க!

By

சென்னை: இந்த வருட எனது பிறந்த நாள் ஸ்பெஷலானது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான இவருக்கு கடந்த 28 ஆம் தேதி, 35 வது பிறந்த நாள்.

புதிய காதலர்

புதிய காதலர்

இதையடுத்து சினிமா பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிறந்த நாளை மும்பையில் தனது புதிய காதலருடன் கொண்டாடினார் ஸ்ருதி. இதற்காக நடந்த பார்ட்டியில் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களில் ஒருவருடைய வாழ்த்து மட்டும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

சாந்தனு ஹஸாரிகா

சாந்தனு ஹஸாரிகா

அது பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹஸாரிகாவின் வாழ்த்து. அவர் 'ஹேப்பி பர்த்டே லவ்' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றிய உங்களுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

பிரிந்து விட்டனர்

பிரிந்து விட்டனர்

இதையடுத்து அவர்தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்தது. நடிகை ஸ்ருதி, ஏற்கனவே, இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார் இருவரும் ஒன்றாக விழாக்களுக்கு சென்ற புகைப்படங்கள் அப்போது வைரலாயின. பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். பிரிந்துவிட்டதை ஸ்ருதிஹாசனும் உறுதி செய்திருந்தார்.

எனக்கு ஸ்பெஷல்

எனக்கு ஸ்பெஷல்

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த வருட பிறந்த நாள் எனக்கு ஸ்பெஷலானது. என் வாழ்க்கையில் சிறந்த கட்டமாக இதை கருதுகிறேன். அதோடு ஒவ்வொரு நாளுமே என்னை நானே சோதனை செய்துகொள்வேன். அதனால், இந்த பிறந்த நாள் அதில் இருந்து வேறுபட்டதல்ல என்று கூறியுள்ளார்.

உயிர் கொடுப்பதில்

உயிர் கொடுப்பதில்

மிகப் பெரிய பட்ஜெட் படமான சலார் படத்தில் நடிப்பது பற்றி கூறும்போது, 'இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பிரபாஸூடன் நடிப்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். எப்போதும் போல இந்தப் படத்தில் நடிக்க என்னை ஈர்த்தது அந்த கேரக்டர்தான். அந்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X