»   »  நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா காதல் முறிவு கிசுகிசு கிளம்ப யார் காரணம் தெரியுமா?

நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா காதல் முறிவு கிசுகிசு கிளம்ப யார் காரணம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் பிரிந்துவிட்டதாக வதந்தி கிளம்ப யார் காரணம் என தெரிய வந்துள்ளது.

ஆதித்யா சோப்ராவின் இயக்கத்தில் ரன்வீர் சிங், வாணி கபூர் ஜோடியாக நடித்துள்ள படம் பேஃபிக்ரே. படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்வதில் ரன்வீரும், வாணியும் படுபிசியாக உள்ளது.

இருவரும் ஓய்வே இல்லாமல் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். படத்தில் 40 முத்தக்காட்சிகள் உள்ளன.

ரன்வீர், தீபிகா

ரன்வீர், தீபிகா

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். பொது இடங்களில் தனது காதலை வெளிப்படுத்த தவறுவது இல்லை ரன்வீர். ஆனால் தீபிகா தான் காதலை ஒப்புக்கொள்ளாமல் உள்ளார்.

காதல் முறிவு

காதல் முறிவு

ரன்வீர் தனது காதலை பொது இடங்களில் பல முறை சொல்லியும், தீபிகா மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

தனித் தனி

தனித் தனி

தீபிகாவும், ரன்வீரும் தனித் தனியாக சுற்றி வந்தனர். இதனால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று நினைத்தால் அது எல்லாம் பேஃபிக்ரே படத்திற்கான பப்ளிசிட்டியாம்.

ஆதித்யா சோப்ரா

ஆதித்யா சோப்ரா

பேஃபிக்ரே படம் ரிலீஸாகும் வரை தீபிகாவை பற்றி பேசுவதோ, பொது இடங்களில் அவருடன் ஜோடியாக இருப்பதோ கூடாது என்று ரன்வீருக்கு ஆதித்யா சோப்ரா உத்தரவிட்டாராம். அவர் பேச்சை கேட்டதால் தான் காதல் முறிவு வதந்தி பரவியுள்ளது.

English summary
Buzz is that Befikre director Aditya Chopra is the reason behind the breakup rumours of Ranveer Singh and Deepika Padukone.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil