பிக்பாசில் இருங்கீங்களா?. ..எத்தனை முறை கேப்பீங்க... கடுப்பான குக் வித் கோமாளி பிரபலம்
சென்னை : இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் டிவி ரியாலிட்டி ஷோ தான். ரியாலிட்டி ஷோ பிரியர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறி உள்ளது பிக்பாஸ். வெளிநாடுகளில் நடத்தப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சி தான் இந்தியாவில் பிக்பாசாக மாற்றிப்பட்டுள்ளது.
முதலில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, நடத்த இந்த நிகழ்ச்சி, பிறகு மற்ற மொழிகளிலும் துவங்கப்பட்டது. இதில் பங்கேற்பவர்களும் சினிமா, டிவி பிரபலங்கள், தொகுத்து வழங்குவதும் மெகா ஸ்டார்கள் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம்.

பாதியில் நிறுத்தப்பட்ட மலையாளம் பிக்பாஸ்
தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வந்த மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி, செட்டில் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். ஏற்கனவே 70 நாட்களுக்கும் மேலாக போட்டி நடத்தப்பட்ட நிலையில் பாதியில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

கொரோனாவால் தாமதமாகும் பிக்பாஸ்
இந்நிலையில் தற்போது கொரோனா சூழல் முடிவுக்கு வந்ததும் பிக்பாஸ் இறுதிப் போட்டியை நடத்த உள்ளதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஜுன் மாதம் துவங்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நிலை தான்
கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஜுன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி துவக்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்று நடத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Recommended Video

கமல் கண்டிப்பா வருவார்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இருந்தும் பிக்பாசிற்கு கமல் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகரிடம் இருந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்கும் ஒப்பந்தத்தில் கமல் கையெழுத்து விட்டதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டது.

எத்தனை முறை தான் கேட்பீங்க
இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 ல் டைட்டில் வென்ற கனி, பிக்பாஸ் 5 ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் பரவியது. ஏற்கனவே இதற்கு பலமுறை கனி மறுப்பு தெரிவித்த போதிலும், இது உண்மையா என்ற கேள்வியை பல ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.

யாருமே இதுவரை பேசவில்லை
இந்நிலையில் ரசிகர்களிடம் சமூக வலைதளம் வழியாக நேரடியாக கலந்துரையாடிய கனியிடம், நீங்கள் பிக்பாசில் இருக்கீங்களா இல்லையா என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கடுப்பாகி பதிலளித்த கனி, இதுவரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் யாரும் தன்னிடம் பேசவில்லை என கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











