என்னது...இந்த குக் வித் கோமாளி பிரபலம் தனுஷ் கூட படித்தவரா ?
சென்னை : விஜய் டிவி.,யின் பிரபலமான நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளியும் ஒன்று. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. முதல் சீசனில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. புகழ், மணிமேகலை உள்ளிட்டோருக்கு நிறைய பட வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. ஷகிலா மீதான இமேஜையும் இந்த நிகழ்ச்சி மாற்றி உள்ளது.

போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவர் பாபா பாஸ்கர். டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும், சமையலிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார். பாபா பாஸ்கரும், நடிகர் தனுஷ் உடன் படித்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் எட்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்ற விஷயம் சமீபத்தில் தான் வெளியானது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











