கரெக்டா 12 மணி...பவித்ர லட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குக் வித் கோமாளி நடிகர்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றவர் பவித்ர லட்சுமி. மாடல், நடிகையான இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களையும், கவர்ச்சி ஃபோட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். வித்தியாசமான ஃபோட்டோக்களை வெளியிட்டு லைக்குகளையும் அள்ளி வருகிறார்.

மலையாளத்தில் அறிமுகமாகும் பவித்ரா

மலையாளத்தில் அறிமுகமாகும் பவித்ரா

பவித்ர லட்சுமி தற்போது முதல் முறையாக மலையாள படமான உல்லாசம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்துடன் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க போகும் படத்திலும் பவித்ரா நடிக்க உள்ளார்.

குவியும் பட வாய்ப்புக்கள்

குவியும் பட வாய்ப்புக்கள்

காமெடி நடிகர் சதீஷ், ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் பவித்ரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் பவித்ரா தான் ஹீரோயினாம்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்கள் பவித்ராவிற்கு வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில தயாரிப்பாளர்கள் பவித்ராவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்

சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்

இந்நிலையில் பவித்ரா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் ஒருவர் இரவு சரியாக 12 மணிக்கு ஃபோன் செய்து பவித்ராவை வாழ்த்தி, சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே தங்கமே

ஹேப்பி பர்த்டே தங்கமே

அந்த பிரபலம் வேறு யாருமில்லை. நடிகர் புகழ் தானாம். அவர் தனது வாழ்த்தில், ஹேப்பி பர்த்டே தங்கமே...நல்ல ஃபிரண்டா கடைசி வரைக்கும் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X