இந்த டைரக்டரின் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம்...அடித்துச் சொல்லும் கலைப்புலி எஸ்.தாணு
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ்.தாணு. டாப் 10 தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் முலம் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
1985 ம் ஆண்டு யார் என்ற படத்தின் முலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். கிழக்கு சீமையிலே, விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், காக்க காக்க, மாயாவி, சச்சின், தெறி, கபாலி, துப்பாக்கி, அசுரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
எஸ்.பி.முத்துராமன் துவங்கி பாரதிராஜா, செல்வராகவன், அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல டைரக்டர்களுடன் பணியாற்றி உள்ளார். பல படங்களை விநியோகம் செய்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், வெல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார்.

யார் அந்த ஹிட் டைரக்டர்
இந்நிலையில் சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் கலைப்புலி எஸ்.தாணு. அவரிடம், நீங்கள் எத்தனையோ நடிகர்கள், டைரக்டர்களுடன் பணியாற்றி உள்ளீர்கள். இந்த டைரக்டரை வைத்து படம் தயாரித்தால் நிச்சம் ஹிட் ஆகும் என்று அடித்துச் சொல்வதானால் நீங்கள் யாரை சொல்வீர்கள் என கேட்கப்பட்டது.

இந்த பதிலை நாங்க எதிர்பார்க்கவேயில்லை
இதற்கு பதிலளித்த தாணு, நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் நெற்றியில் அடித்தது போல் சொல்ல வேண்டுமானால் தேசிங்கு பெரியசாமி. மிக அற்புதமான டைரக்டர். எழுதி வச்சுக்கோங்க. குறிச்சு வச்சுக்கோங்க. மிக அற்புதமான டைரக்டராக, பெரிய ஆளாக வருவார். அவரது காலம் தமிழ் சினிமாவின் பொற்காலமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது படைப்பாற்றல் பிரம்மாண்டமாக இருக்கும்.

என்ன இப்படி புகழ்ந்திருக்கிறார்
அப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை. என்னால ஒன்னுமே சொல்ல முடியல. அசந்து போய் கட்டிப்பிடிச்சேன். எப்படி வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சுதா கொங்கரா போன்றவர்கள் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார்கேளா, அதே போல் இவரும் ஒருநாள் மிகப் பெரிய டைரக்டர் அந்தஸ்தை பெறுவார்.

இந்த காம்போ கன்ஃபார்ம் ஆகிடுச்சா
ரஜினிக்காக இவர் எழுதிய கதை ஒன்றை கேட்டேன். அந்த படம் உருவானால் நிச்சயம் அது பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வாக இருக்கும் என நிச்சயமாக சொல்வேன். நிச்சயம் அந்த படம் நடக்கும் என நம்புகிறேன் என்றார் கலைப்புலி எஸ்.தாணு.இதனால் தேசிங்கு பெரியசாமி - ரஜினி - கலைப்புலி எஸ்.தாணு காம்போவில் நிச்சயம் ஒரு படம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

அட அந்த டைரக்டரா இவரு
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தேசிங்கு பெரியசாமி. ரஜினி அடுத்து நடிக்க உள்ள தலைவர் 169 படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்த போது, அதிகம் அடிப்பட்ட பெயர் தேசிங்கு பெரியசாமி தான். இவரது கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போய் விட்டதாகவும், ஆனால் பட்ஜெட் பெரிதாக உள்ளதால் படம் உறுதியாகவில்லை என சொல்லப்பட்டது. அதே போல் தேசிங்கு பெரியசாமி ரஜினியை இயக்க போகும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.


Click it and Unblock the Notifications











