twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ஆர்.கே.நகர்ல என் வேட்புமனு ரிஜெக்ட் ஆகணும்னு வேண்டுனவங்கள்ல இவரும் ஒருத்தர்" - விஷால் பேச்சு

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி மனம் திறந்த விஷால்- வீடியோ

    சென்னை : அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை கிரீன்பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

    இந்த விழாவில், விஷால், சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

    வேட்புமனு நிராகரிக்கப்படணும்னு வேண்டினவர்

    வேட்புமனு நிராகரிக்கப்படணும்னு வேண்டினவர்

    "ஆர்.கே.நகர் தேர்தலில் நான் நிற்கக்கூடாதுனு வேண்டிக்கிட்ட பல நண்பர்கள்ல மித்ரனும் ஒருத்தன். வீட்ல உட்கார்ந்து எல்லா சாமி முன்னாடியும் நின்னு கண்டிப்பா நான் தேர்தல்ல நிற்கக்கூடாதுனு வேண்டியிருப்பான். அவன் பிரார்த்தனை நிறைவேறிடுச்சுனு நினைக்கிறேன்.

    தள்ளிப்போகும் படம்

    தள்ளிப்போகும் படம்

    ஏன்னா, இந்த வருசம் ஏப்ரல் 14-ல் வரவேண்டிய படம் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல நான் போட்டியிட்டதால் இவ்வளவு தூரம் தள்ளிப் போயிடுச்சு. இப்போ ஆர்.கே.நகர் தேர்தல்லேயும் போட்டியிட்டிருந்தா அடுத்த ஏப்ரல் 14 வரைக்கும் படம் தள்ளிப் போயிருக்கும்னு நினைச்சிருப்பான்.

    சோறு போடும் சினிமா

    சோறு போடும் சினிமா

    தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல நிக்காம ஒரு சுயநலவாதியா இருந்திருக்கலாம். ஆனா, என்னை வாழவெச்சு சோறு போடுற கடவுளான இந்த சினிமாவுக்கு அந்த நேரத்தில் நல்லது பண்ணனும்னு தோணுச்சு. அதனால் தான் அணி அமைச்சு தேர்தலில் போட்டியிட்டோம்.

    சினிமாவுக்கு நல்லது செய்யணும்

    சினிமாவுக்கு நல்லது செய்யணும்

    நான் நினைச்சிருந்தா பேசாம படத்தை கடந்த ஏப்ரல் 14 அப்போவே ரிலீஸ் பண்ணியிருப்பேன். நான் வட்டிக்கு வாங்கி படம் எடுத்துக்கிட்டு இருக்கேன். படம் லேட்டாச்சுனா வட்டி ஏறிக்கிட்டே போகும். அதையெல்லாம் ஏத்துக்கிட்டு தான் சினிமாவுக்கு நல்லது செய்றதுக்காக தேர்தலில் போட்டியிட்டேன்." எனப் பேசினார்.

    English summary
    'IrumbuThirai' starred Vishal, Samantha and Arjun directed by PS Mithran. Teaser launch ceremony of 'Irumbuthirai' took place last night. Vishal said, "PS Mithran is the one, There are many people who wanted my RK Nagar nomination rejection."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X