சூர்யாவின் வணங்கான் படத்தில் இணைந்த பிரபல டைரக்டர்...இவருக்கு என்ன ரோல் தெரியுமா?
சென்னை : நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பாலா - சூர்யா காம்போ மீண்டும் இணைந்துள்ள புதிய படத்திற்கு வணங்கான் என டைட்டில் வைத்துள்ளனர். பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம்.
சமீபத்தில் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் டைட்டில் அறிவிக்கப்பட்டது. சூர்யா காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டரில் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் வணங்கான் படத்தில் சூர்யா உடன் கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

முழுக்க முழுக்க பாலா படம் தான்
வணங்கான் படத்தின் முக்கிய காட்சிகள் கன்னியாக்குமரி மற்றும் அதனை ஒட்டிய மீனவ கிராமங்களில் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.இந்திய கடற் பகுதியில் நடுக்கடலிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது த்ரில்லிங்கான, அதே சமயம் முழுக்க முழுக்க பாலா ஸ்டைலில் உருவாக்கப்பட்ட படமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஷுட்டிங் எப்போ
கன்னியாக்குமரி ஷுட்டிங்கை தொடர்ந்து ஜுலையில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் கோவாவில் துவங்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் கோவாவில் அடுத்த கட்ட ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வணங்கான் டீமில் மற்றொரு டைரக்டர்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, கோலிவுட்டின் பிரபல டைரக்டரான ஏ.எல்.விஜய், வணங்கான் படத்தில் இணைந்துள்ளாராம். கதை உள்ளிட்டவற்றில் பாலாவிற்கு உதவியாக இருக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏ.எல்.விஜய் தற்போது தனது படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இருந்தாலும் பாலா மற்றும் சூர்யா மீதான மரியாதை காரணமாக இந்த படத்தில் பணியாற்ற ஓகே சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓ...அவருக்கு பதில் தான் இவரா
ஏ.எல்.விஜய்யின் அமைதியான தோற்றம், படக்குழுவில் உள்ளவர்களிடம் அமைதியான அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக அவரை இந்த படத்தில் பாலாவிற்கு உதவியாக இருக்க வைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் தான் இந்த முடிவை எடுத்தார்களாம். ஏற்கனவே இந்த வேலையை தான் டைரக்டர் சுதா கொங்கரா செய்து வந்தார்.

லீவில் போன சுதா கொங்கரா
ஆனால் சுதா கொங்கரா தற்போது, இந்தியில் தான் இயக்கி வரும் சூரரைப் போற்று ரீமேக் வேலைகளை கவனிக்க விடுமுறையில் மும்பை சென்றுள்ளார். அக்ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தை சூர்யா தான் தயாரிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா பிஸியாக இருப்பதால் அவருக்கு பதில் ஏ.எல்.விஜய் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வணங்கான் எப்போ ரிலீஸ்
ஏ.எல்.விஜய் தற்போது அருண் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். வணங்கான் படத்திற்காக அருண் விஜய் படத்திற்கு ஏ.எல்.விஜய் பிரேக் விட்டுள்ள சொல்லப்படுகிறது. வணங்கான் படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதி வரை நடக்கும் என சொல்லப்படுகிறது.இந்த படத்தை 2023 ம் ஆண்டின் முதல் பாதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வணங்கானுக்கு முன் இன்னொரு படம்
அதே சமயம் வணங்கான் படத்துடன் சேர்த்து ஒரே சமயத்தில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2023 ல் சூர்யாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











