இந்த வாரம் வெள்ளிக்கிழமை 7 படங்கள் ரிலீஸ்.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!
சென்னை: வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.இதனால், ரசிகர் மகிழ்ச்சியில் உள்ளனர். அவை என்னென்ன படம் என்பதை பார்க்கலாம்.
கடைசி உலகப்போர்: நடிகர் ஹிப் ஹாப் தமிழா தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் கடைசி உலகப் போர். இதில், நாசர், நட்டி நட்ராஜ், அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ் காந்த், சிங்கம் புலி, கல்யான் மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரித்து, இயக்கி நடித்ததுடன் இசையும் அமைத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

தோழர் சேகுவேரா: சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து 'தோழர் சேகுவேரா' திரைப்படம் 20ந் தேதி வெளியாக உள்ளது. அலெக்ஸ் இயக்கி உள்ள இப்படத்தில்,சத்யராஜுடன் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார்.
லப்பர் பந்து: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'லப்பர் பந்து' வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தை, அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
நந்தன்: அயோத்தி, கருடன், படத்திற்கு பிறகு சசிகுமார் லீட்ரோலில் நடித்திருக்கும் படம் நந்தன். இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'இரா' என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டம் என் கையில்: நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனான அறிமுகமான சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சட்டம் என் கையில்'. வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தில், சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
கோழிப்பண்ணை செல்லத்துரை: சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் உள்ள படம் 'கோழிப்பண்ணை செல்லத்துரை'. இதில், ஏகன், யோகி பாபு, பிரிகிடா, பவா செல்லத்துரை, லியோ சிவக்குமார், சத்ய தேவி, ஜெய சூர்யா, 'குட்டி புலி' தினேஷ், ரியாஸ், மானஸ்வி கொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்ணன் - தங்கை உறவை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கும் இப்படத்தை என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.இப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது.
தோனிமா: சிகை, பக்ரீத் படங்களை இயக்கி ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ள படம் தோனிமா. எழை எளிய மக்களின் வாழ்க்கை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில், வீடுகளில் பார்க்கும் பெண்ணாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். கட்டிட வேலை பார்ப்பவராக காளிவெங்கட் நடித்துள்ளார். வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 20ந் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications











