கவர்னர் பிஹேவ் பண்றது சகிக்கல.. விஜய் முதலமைச்சராக வேண்டும்.. திடீர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ்!

சென்னை: சினிமாவில் தான் விஜய்க்கு வில்லனாக கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்தார் என்று பார்த்தால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகும் அவரை கடுமையாக எதிர்த்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

விஜய் ஒரு நடிகன் அவனிடம் டைரக்ட்டாக முதலமைச்சர் பதவியை மக்கள் தூக்கி கொடுத்துடுவாங்களா?, விஜய்க்கு அரசியல்னா என்னனு தெரியுமா? விஜய் தனது டிரைவர் மகனை எம்.எல்.ஏ ஆக்கியுள்ளார் என ஏளனமாக பேசி வந்த பிரகாஷ் ராஜ் தற்போது விஜய்க்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

This Governor s behaviour is Disgusting Prakash Raj sudden support to TVK Leader Vijay

விஜய்க்கு எதிராக அரசியல் செய்த பலரும் தற்போது பாஜக தூண்டுதலின் பேரில் கவர்னர் செயல்படக் கூடாது என்றும் தனிப் பெரும்பான்மை நிரூபித்துள்ள விஜய்யின் தவெக தான் ஆட்சியமைக்க வேண்டும் என விஜய்க்கு ஆதரவாக பேசும் நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

கவர்னர் பண்றது சகிக்கல: தொடர்ந்து பாஜகவை எதிர்த்து ஏகப்பட்ட ஜஸ்ட் ஆஸ்கிங் ட்வீட்களை போட்டும் வெளிப்படையாக மேடைகளில் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்த்தும் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த கவர்னர் பிஹேவ் பண்றதே டிஸ்கஸ்டிங்காக உள்ளது. விஜய் ஃப்ளோர் டெஸ்ட்டில் தான் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதிகப்படியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய்யை கவர்னர் பதவியேற்க அழைப்பது தான் ஜனநாயகம் என தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருமா?: திமுக - அதிமுக கூட்டணி என்று நேற்று திடீரென கிளப்பிவிட்ட நிலையில், தவெக ஆட்சியை ஒருபோதும் திமுக கெடுக்காது என மு.க. ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறிவிட்டார். இந்நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் பக்கம் வந்தால் மட்டுமே அவர் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்க முடியும். ஆனால், அவர்களது டிமாண்ட் ரொம்பவே அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சிக்கல்களை பார்த்து மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X