இந்த பாட்டிக்கு தான் முதல் வீடு கட்டிக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்: உருக்கமான வீடியோ
Recommended Video

சென்னை: கஜா புயலால் வீட்டை இழந்து கண்ணீர் வடிக்கும் மூதாட்டிக்கு தான் முதலில் வீடு கட்டிக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ்.
கஜா புயலால் பலர் வீடுகளை இழந்து வாடுகிறார்கள். பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் விடுகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50 பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
அதன்படி அதற்கான வேலைகளையும் அவர் துவங்கிவிட்டார்.
மூதாட்டி
புயலால் வீட்டை இழந்துவிட்டு அழும் மூதாட்டி ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. அந்த மூதாட்டிக்கு தான் முதலில் வீடு கட்டிக் கொடுக்கப் போகிறார் ராகவா லாரன்ஸ்.
பொறுப்பு
அந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பொறுப்பை சில இளைஞர்களிடம் விட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். வீடு கட்டும் பணி துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு
50 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் ராகவா லாரன்ஸை பலரும் பாராட்டியுள்ளனர். ராகவேந்திரா சாமியின் ஆசி அவருக்கு என்றும் உண்டு என்று வாழ்த்தியுள்ளனர். நீங்க நல்லா இருக்கணும் ராகவா லாரன்ஸ்.
உதவி
வீடு மட்டும் அல்ல மூன்று சக்கர நாற்காலியையும் இழந்து நிற்கும் இவரும் உதவியை எதிர்பார்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











