கொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி இவர்கள்தான்!
சென்னை: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ, ஹீரோயின் இவர்கள்தான்.
நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பது சினிமாவில் சகஜம். பல படங்களுக்கு அப்படி நடந்திருக்கிறது.
பல படங்களில், முதலில் ஒரு ஹீரோ ஒப்பந்தமாகியும் பிறகு அவர் மாற்றப்பட்டு வேறு ஹீரோ ஒப்பந்தமாகி உள்ளனர்.

த்ரில்லர் காதலன்
அதே போலதான் ஹீரோயின்களும். பல படங்களில் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது படம், காதலன். முதல் படமான ஜென்டில்மேன் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, ஷங்கர் அடுத்து ரொமான்டிக் த்ரில்லர் கதையை, கையில் எடுத்தார். அது காதலன்!

மெகா ஸ்டார்காஸ்ட்
இந்தப் படமும் மெகா ஹிட்டானது. 1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பிரபு தேவா ஹீரோ. அவர் ஜோடியாக நக்மா நடித்திருந்தார். வடிவேலு, ரகுவரன், கிரிஷ் கர்னாட், எஸ்.பி.பாலசுப்ரமணியம், அஜய் ரத்னம், மனோரமா என மெகா ஸ்டார் காஸ்ட். எல்லோருமே பிசி நடிகர்கள். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பாளர்.

டேக் இட் ஈசி ஊர்வசி
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி, என்னவளே அடி என்னவளே, பேட்ட ராப், முக்காலா முக்காபுலா உள்பட அனைத்தும் அப்படி ஹிட். அந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் பாடல்களை முணுமுணுக்காக உதடுகள் இல்லை எனலாம்.

கண்ணாடியில் பேருந்து
ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி, கண்ணாடியிலான பஸ் ஒன்றை அப்படியே உருவாக்கி இருந்தார். அந்த காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்ப்ட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. அதெப்படி கண்ணாடியிலேயே பஸ்? என்று ஆச்சர்யப்பட்டனர் ரசிகர்கள்.

டப்பிங் விக்ரம்
பிரபு தேவாவின் நடனமும் முக்காபுலா பாடலின் கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர், அப்போது வாய்ப்புக்குப் போராடிக் கொண்டிருந்த நடிகர், விக்ரம். ஹீரோயின் நக்மாவுக்கு குரல் கொடுத்தவர், பிரபல நடிகை சரிதா.

பிசியான பிரசாந்த்
ஷங்கரின் முதல்படமான ஜென்டில்மேனில், சரத்குமாருக்கு பதில் அர்ஜுன் ஹீரோவாக நடித்தார். அதே போல இந்தப் படத்திலும் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் வேறொரு ஹீரோ. அது பிரசாந்த். அப்போது பிசியான நடிகர் பிரசாந்த். அவரைதான் நடிக்க வைக்க முயன்றார் ஷங்கர்.

பாலிவுட் மாதுரி
கால்ஷீட் கிடைக்கவில்லை. பிறகுதான் பிரபுதேவா ஹீரோவானார். ஹீரோயினாக நடிக்க இருந்தவர் நக்மா அல்ல. பிரபல பாலிவுட் ஹீரோயின் மாதுரி தீக்ஷித். அவரிடம்தான் கதை சொல்லி இருந்தார்கள். அவரும் நடிப்பதாகச் சொல்லி இருந்தார். ஆனால் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதையடுத்துதான் ஹீரோயினாக தேர்வானார், நக்மா.


Click it and Unblock the Notifications











