எச்சரிக்கை இது ஸ்ரீரெட்டி நடமாடும் பகுதி கவனம் அன்பு நகர் மக்களின் அட்ராசிட்டி விளம்பரம்
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வசிக்கும் வளசரவாக்கம் அன்பு நகரில் பல இடங்களில் இது ஸ்ரீ ரெட்டி காரை திருப்பும் இடம். எனவே வாகனங்களை பார்க்கிங் செய்யாதீர்கள், என்று பலகை வைத்துள்ளனர். ஏனென்றால் அவர் காரில் செல்லும் போது வழியில் ஏதாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த வாகனங்களின் உரிமையாளர்களை காதில் ரத்தம் வரும் அளவுக்கு சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து விடுகிறாராம்.
டோலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகத்தில் பலர் மீது பாலியல் புகார் கூறி அனைவரையும் தெறிக்கவிட்டு, அடுத்ததாக யார் மீது புகார் சொல்லப்போகிறாரோ என்று தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்து பரபரப்பை உண்டாக்கி வெகு சீக்கிரமே பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு திரையுலகிற்கு சிறிது காலம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு தமிழ் திரையுலகில் சுனாமியாக திரும்பிய ஸ்ரீரெட்டி வரிசையாக நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இப்படி ஒருபுறம் புயலை கிளப்பிய ஸ்ரீரெட்டி வசிப்பது என்னவோ சென்னை வளசரவாக்கத்தில் அன்பு நகர் எனும் பகுதியில் தான்.
திரையுலகினருக்கு மட்டுமல்ல அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஸ்ரீரெட்டி என்ற பெயரை கேள்விப்பட்டாலே சிறிது பீதியில் உறைந்து போகிறார்கள். மலேரியா, டெங்கு காய்ச்சல் என்றால் கூட நம் சென்னை வாசிகள் அந்த அளவிற்கு பயப்படவில்லை. ஆனால் ஸ்ரீரெட்டி என்ற பெயரைக்கேட்டாலே காத தூரம் ஓட்டம் எடுக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா.
ஸ்ரீரெட்டி வசிக்கும் அன்பு நகரில் பல இடங்களில் இது ஸ்ரீ ரெட்டி காரை திருப்பும் இடம். எனவே வாகனங்களை பார்க்கிங் செய்யாதீர்கள், என்று பலகை வைத்துள்ளனர். ஏனென்றால் அவர் காரில் செல்லும் போது வழியில் ஏதாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த வாகனங்களின் உரிமையாளர்களை காதில் ரத்தம் வரும் அளவுக்கு சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து விடுகிறாராம்.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடிகை ஸ்ரீரெட்டியைப் பற்றி நன்கு அறிந்ததால் அவர்கள் யாரும் அங்கே வாகனங்கள் நிறுத்துவதில்லை. எதற்கு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்று வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டும்.
இருப்பினும் வெளி நபர்கள் யாராவது தங்களது வாகனங்களை அந்த இடத்தில் நிறுத்திவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த ஏரியா வாசிகள், இந்த ஸ்ரீரெட்டி என்ற சுனாமி எச்சரிக்கை பலகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். அந்த பயம் இருக்கட்டும்.
அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று கொடுக்கும். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் வசிப்பவர்களுக்கு இந்த பழமொழி ஒரு நல்ல உதாரணம்.


Click it and Unblock the Notifications











