கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் முடித்த அஜித்: பாராட்டியதற்கு என்ன சொன்னார் தெரியுமா?
Recommended Video

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் நடித்துள்ளார் அஜித்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் வரும் நீதிமன்ற காட்சி தான் முக்கியமானது.
கிளைமாக்ஸ் காட்சியான அதற்காக பிரமாண்ட நீதிமன்ற செட் போட்டு படமாக்கியுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை
நீதிமன்ற காட்சி தான் கடைசியாக எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காட்சியில் அஜித்துக்கு நீளமான வசனங்கள் உண்டு. அவர் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பெண்களுக்காக வாதாடி ஜெயிக்க வேண்டும்.

அஜித்
நீளமான வசனங்கள் இருந்தபோதிலும் அஜித் அதை ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டாராம். அஜித் அசால்டாக நடித்ததை பார்த்த படக்குழுவினர் செம தல, அசத்திட்டீங்க தல என்று ஆளாளுக்கு பாராட்டியுள்ளனர். அந்த காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இயக்குநர்
படக்குழுவினர் பாராட்டியதை பார்த்த அஜித் இந்த பாராட்டு எல்லாம் எனக்கு அல்ல இயக்குநர் வினோத்துக்கு தான் சொந்தம். அவர் இயக்கத்தில் நடித்தது சவுகரியமாக இருந்தது. அவரை பாராட்டுங்கள் என்றாராம். இதை கேட்ட படக்குழு இது தான்யா தல குணம் என்று நெகிழ்ந்துள்ளது.

தல 60
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்க வினோத்தை தயாரிப்பாளர் போனி கபூருக்கு பரிந்துரை செய்ததே அஜித் தான். தல 60 படத்தையும் வினோத்தே இயக்குவார் என்று கூறப்படுகிறது. வினோத் வேலை செய்யும் விதம் அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.


Click it and Unblock the Notifications











