For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் இன்று... பருத்திவீரன் நினைவுகள்!

By Vignesh Selvaraj
|
பருத்திவீரன் ரிலீஸ் ஆன நாள் இன்று- வீடியோ

சென்னை : கார்த்தி சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியால் செம மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி இன்று நல்ல படங்களில் நடித்து இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் முதல் படமே பிரமாண்ட வெற்றியை அடைந்தது தான் காரணம்.

கார்த்தியின் சினிமா வாழ்க்கையைத் துவக்கி வைத்த 'பருத்தீவிரன்' திரைப்படம் ரிலீஸான தினம் இன்று தான். இந்த நாளை அவரது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

அமெரிக்காவில் உயர்கல்வி படித்த கார்த்தி சினிமாவில் இறங்குவது என முடிவான பின் மணிரத்னமிடம் அசிஸ்டென்ட் டைரக்டராகப் பணியாற்றினார். பிறகு நடிக்க முடிவு செய்ததும் முதல் அடியை வைக்கும்போதே ஒரு தரமான படைப்பின் மூலம் தான் தன் வருகையைத் தெரிவித்தார்.

முயற்சி

முயற்சி

அண்ணன் சூர்யா, அப்பா சிவகுமார் என நடிப்புக்கு வெகு நெருக்கமான குடும்பத்தில் இருந்து வந்தாலும், இன்று அவர் இருக்கும் நிலைக்குக் காரணம் அவரது இடைவிடாத முயற்சியும், உழைப்பும் மட்டுமே. அவரது வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது 'பருத்திவீரன்'.

பருத்திவீரன்

பருத்திவீரன்

அமீரின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தலான இசையில் வெளியான 'பருத்திவீரன்' தமிழகம் முழுவதுமே பட்டையை கிளப்பிய படம். இன்றும் மனதை விட்டு நீங்காத கிளைமாக்ஸ், ப்ரியாமணியின் மிரட்டலான நடிப்பு என படத்தில் நடித்த எல்லோர் வாழ்க்கையிலும் திருப்புமுனை தந்த படம் 'பருத்திவீரன்'.

கிராமத்து படம்

கிராமத்து படம்

அசலான கிராமத்து மனிதர்களின் முகங்களையும், அனல் அடிக்கும் ஊர்ப்புறத்தையும் அப்படியே பதிவு செய்த விதத்தால் தமிழ் சினிமா இன்றளவும் பெருமைகொள்ளக்கூடிய படைப்பாகவே இருக்கிறது 'பருத்திவீரன்'. வசூல் ரீதியாகவும் பெருவெற்றியைப் பெற்றது இப்படம்.

டக்ளஸ்

டக்ளஸ்

இந்தப் படத்தில் டக்ளஸாக நடித்த கஞ்சா கருப்பு, பொணந்தின்னி செவ்வாழை எனும் கேரக்டரில் வந்தவர், இருவரையும் செம ரவுசு கொடுத்து தெறிக்கவிடும் கார்த்தி, சரவணன் என இந்தப் படம் காமெடியும் நிறைந்த பேக்கேஜாக இருந்தது.

எமோஷன்

எமோஷன்

அழகான காதல், காதலுக்குள் இருக்கும் உணர்வுகள், பாசப்போராட்டம் ஆகியவற்றை மிகையில்லாமல் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்த பருத்திவீரன் படத்தால், முத்தழகும் பருத்திவீரனும் காதலர்களால் கொண்டாடப்பட்டார்கள்.

மறக்கவே முடியாது

மறக்கவே முடியாது

யுவனின் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெகுவாக பாராட்டப்பட்டன. நடிகர், நடிகைகளுக்கும், படக்குழுவினருக்கும் நல்ல வெற்றியைக் கொடுத்த இந்தப் படத்தை ரசிகர்களைப் போலவே அவர்களாலும் நிச்சயம் எப்போதும் மறந்துவிட முடியாது. பருத்திவீரன் டே வாழ்த்துகள் கார்த்தி!

English summary
Actor Karthi is happy with the success of the film recently, 'Theeran adhigaram Ondru'. Karthi's movie career started with the film 'Paruthiveeran'. The massive hit paruthiveeran was released on this day 11 years ago.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more