இந்த நேரத்துல, அதுல மட்டும் விழுந்திடாதீங்க... பிரபல ஹீரோயின் சொல்லும் லாக்டவுன் அட்வைஸ் இதுதான்!
மும்பை: இந்த லாக்டவுன், உலகம் நமக்கு தந்திருக்கிற எதிர்பாராத வாய்ப்பு என்று நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் உருவான இந்த தொற்று, இப்போது, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

முடங்கி கிடக்கின்றனர்
அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர்.

நீது சந்திரா
இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அசாம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துள்ளன. இந்நிலையில் நடிகை நீது சந்திரா, இது உலகம் நமக்கு தந்திருக்கிற எதிர்பாராத வாய்ப்பு என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருந்த நீது சந்திரா, கடந்த பிப்ரவரி மாதம் மும்பை திரும்பினார்.

எதிர்பாராத வாய்ப்பு
அவர் கூறும்போது, ' லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறேன். எனது சகோதரரும் உதவுகிறார். பணத்துக்கு பதிலாக, தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து உதவுங்கள். இந்த லாக்டவுன் உலகம் நமக்கு தந்திருக்கிற எதிர்பாராத வாய்ப்பு. அதனால் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள். காலையில் யோகாவில் இருந்து எனது வேலையை நான் தொடங்குகிறேன்.

விழுந்து விடாதீர்கள்
அதிகமாகப் புத்தகங்கள் படிக்கிறேன். இதுவரை பார்க்காத திரைப்படங்களை பார்க்கிறேன். இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மனச்சோர்வில் மட்டும் விழுந்து விடாதீர்கள். இதுபோன்ற கடினமான நேரத்தில், நேர்மறையான விஷயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சிறப்பாக வெளிப்படுவீர்கள்' என்று கூறியுள்ளார்.

பிளாக் பெல்ட்
நடிகை நீது சந்திரா, தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். டேக்வாண்டோவில் பிளாக்பெல்ட் வாங்கியவர்.


Click it and Unblock the Notifications











