உன்னோட கேரியர்லயே இந்த படம் பெஸ்ட்டா இருக்க போகுது... ஆர்யாவை உச்சிமுகர்ந்த சிவகார்த்திகேயன்

சென்னை : நடிகர் ஆர்யாவின் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை.

இந்த படம் வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கம்

பா ரஞ்சித் இயக்கம்

நடிகர் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையில் அதிகமாக காணப்பட்ட குத்துச்சண்டையை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரியாதையின் அடையாளம்

மரியாதையின் அடையாளம்

குத்துச்சண்டை விளையாட்டாக மட்டுமில்லாமல் பாரம்பரியம் மற்றும் மரியாதையின் அடையாளமாகவும் பர்க்கப்பட்டதை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாகவும் சென்னையின் பல தெரியாத விஷயங்களை இந்த படம் சொல்லும் என்றும் படம் குறித்து பேசிய பா ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

வெளியான ட்ரெயிலர்

வெளியான ட்ரெயிலர்

சார்பட்டா பரம்பரையை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சித்து வந்த நிலையில் திரையரங்குகள் திறக்க தாமதம் ஆவதையொட்டி படம் வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது.

Recommended Video

Actor Soori Pressmeet | வாழ்க்க ரொம்ப கசப்பா இருக்கு | முதல்ல எல்லாம் ஊசி போடுங்க
சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இதில் ஆர்யா கேரக்டராகவே உருமாறியுள்ளார். இந்த கேரக்டருக்காக அவர் அதிகமாக மெனக்கெட்டுள்ளது தெரிய வருகிறது. இதையொட்டி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணணம் உள்ளது. இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் மூலம் ஆர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பாராட்டு

இந்த படம் ஆர்யாவின் சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பான வெற்றிக்கும் படக்குழுவிற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பதிலுக்கு ஆர்யாவும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X