கிளினீங், சமையல், டாக்டர்..மகளின் செல்ல விளையாட்டுகள்..லாக்டவுனில் இதைதான் செய்கிறார் அசின்!

By

கொச்சி: பிரபல நடிகை அசின் வெளியிட்டுள்ள தனது செல்ல மகளின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அசின்.

தொடர்ந்து சூர்யா ஜோடியாக கஜினி, விஜய் ஜோடியாக சிவகாசி, போக்கிரி, காவலன், அஜித்துடன் ஆழ்வார் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

இந்தி அறிமுகம்

இந்தி அறிமுகம்

தமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஆமிர்கான் ஹீரோவாக நடித்தார். இந்தப் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் அசின். இதையடுத்து அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குவிந்தன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஜோடியாக ரெடி, அக்‌ஷய்குமார் ஜோடியாக ஹவுஸ்புல் 2, கில்லாடி 786, அஜய்தேவ்கனுடன் போல்பச்சன் படங்களில் நடித்தார்.

காதலித்து வந்தனர்

காதலித்து வந்தனர்

இந்நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் தனது நண்பரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான, ராகுல் ஷர்மாவை, நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அசினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து இருவரும் நட்பாகப் பழகினர். நட்பு காதலானது. இருவரும் காதலில் விழுந்தனர். சில மாதங்களாகக் காதலித்து வந்தனர்.

விளையாட்டு

விளையாட்டு

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம், பிரமாண்டமாக, இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இவர்களுக்கு அரின் என்ற மகள் இருக்கிறாள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்ட நடிகை அசின், தனது மகளை கவனித்து வருகிறார். தற்போது இரண்டு வயதாகிவிட்ட அரின், வீட்டில் பரபரப்பாக இருக்கிறார்.

எங்கள் லிட்டில் செஃப்

எங்கள் லிட்டில் செஃப்

வீட்டில் அரின் செய்யும் விளையாட்டுகளையும் செல்ல சேட்டைகளையும் போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார், நடிகை அசின். இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிக்கும் படியாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் காய்கறி நறுக்கி சமையல் செய்ய அரின் ரெடியாகும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

புதிய போட்டோ

புதிய போட்டோ

எங்கள் லிட்டில் செஃப் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் அசின். பிறகு, அரின் வீடு பெருக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இவை வரவேற்பை பெற்றன. இந்நிலையில், புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொம்மைக்கு ஸ்டெத் வைத்து செக் பண்ணும் டாக்டராகி இருக்கிறார் அசின் மகள். இதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X