என்னை தயாரிப்பாளராக்கியது இவர் தான்...உண்மையை போட்டுடைத்த இசைப்புயல்

சென்னை : இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், '99 சாங்ஸ்' என்ற படத்தை எழுதி, தயாரித்துள்ளார். இந்த படம் இந்தியா முழுவதும் 3 மொழிகளில் ஏப்ரல் 16 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதும் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.

இதுவரை இசையமைப்பாளராக மட்டும் இருந்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், '99 சாங்ஸ்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாராக உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா

இவர் தான் எல்லாத்துக்கும் காரணமா

இந்நிலையில் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக திடீரென உருவெடுக்க உங்களை தூண்டியது எது என சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "டைரக்டர் மணிரத்னம் ஒருமுறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது நீங்கள் ஒரு பாடலை உருவாக்குவது போன்று தான்.

கதையான இசை உருவாக்கம்

கதையான இசை உருவாக்கம்

ஒரு பாடலை உருவாக்க முதலில் நீங்க அறிமுக இசை, பிறகு பாடலின் தீம், இசை, பிஜிஎம் போன்றவற்றை உருவாக்குவீர்கள். முடிவாக இசையை ஒன்றிணைத்து ஒரு அழகான பாடலை உருவாக்குவீர்கள் என்றார். கதை சொல்வதைப் போன்று பாடல் உருவாக்கத்தை அவர் விளக்கினார்.

எழுதுவது அற்புதமான கலை

எழுதுவது அற்புதமான கலை

அப்போது தான் தோன்றியது ஒரு விஷயத்தை நமக்கு தெரிந்த மொழியில் எவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்று. கதை எழுதும் கலை எவ்வளவு அற்புதமானது என தோன்றியது. அது தான் எனக்கு தூண்டுதலாக அமைந்தது.

 மக்களை படிப்பது பிடிக்கும்

மக்களை படிப்பது பிடிக்கும்

எனக்கு கதைகள் பிடிக்கும், மக்களையும், அவர்கள் வாழ்க்கையையும் படிக்கவும் எனக்கு பிடிக்கும். நமது இந்திய கலாச்சார மக்களை மட்டுமல்ல, பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்ள பிடிக்கும்" என்றார்.

மணிரத்னத்துடன் 14 படங்கள்

மணிரத்னத்துடன் 14 படங்கள்

1992 ல் 'ரோஜா' படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டர் மணிரத்னத்துடன், கடந்த 29 ஆண்டுகளில் ரஹ்மான் 14 படங்களில் ஒன்றாக பணியாற்றி உள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைக்கிறார்.

3 மொழிகளில் '99 சாங்ஸ்'

3 மொழிகளில் '99 சாங்ஸ்'

எப்போதும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படும் ஜோடியாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் இணை உள்ளது.

ரஹ்மான் தயாரித்துள்ள '99 சாங்ஸ்' படம் மனதை கரைய வைக்கும் இசை கலந்த, காதல் கதை. எலன் பட், எடில்சி வர்கஸ் என புதுமுகங்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X