twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்: புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தவர் அந்த சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவான கதை!

    By
    |

    சென்னை: கல்லூரி வாசலில் புளியங்காய் பறித்துக்கொண்டிருந்தவர் சினிமாவில் ஹீரோவான கதை இது.

    அந்த காலகட்டங்களில், புதுமுக ஹீரோக்களை கல்லூரிகளில்தான் தேடுவார்கள். அது ஒரு காலம்!

    அந்த பக்கம் போயிடாத, பாரதிராஜா மாதிரி டைரக்டர்ஸ் கண்ணுல பட்டா ஹீரோவாக்கிட போறாங்க?' என்ற கிண்டலாக நண்பர்கள் பேசிக்கொள்வது கூட இருந்தது.

    ஆண் ஒருவருடன் வைரலான போட்டோ.. இதையும் பாருங்க.. ஃபேமிலி பிரண்ட் என விளக்கம் கொடுத்த வனிதா!ஆண் ஒருவருடன் வைரலான போட்டோ.. இதையும் பாருங்க.. ஃபேமிலி பிரண்ட் என விளக்கம் கொடுத்த வனிதா!

     குறும்படங்கள்

    குறும்படங்கள்

    இப்போது அப்படியல்ல, நடிப்பு ஆசை கொண்ட பலருக்கு எளிதாக கிடைத்து விடுகிறது குறும்படங்கள். இல்லை என்றால் சொந்தமாகவே குறும்படங்களை தயாரித்தும் கொள்ளலாம். இதை வைத்து சினிமாவுக்கு எளிதாக வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அப்படியல்ல. குறும்படங்கள் குறைவு. நேரடியாக சினிமாதான். அப்படி பல புதிய ஹிரோக்கள் கல்லூரிகளில் இருந்து கிடைத்தார்கள் தமிழ் சினிமாவுக்கு.

     வினியோகஸ்தர் கேயார்

    வினியோகஸ்தர் கேயார்

    அதில் ஒருவர், சிவா! ஈரமான ரோஜாவே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, பிறகு பல படங்களில் நடித்தவர். இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோ ஆன கதை சுவாரஸ்யமானது. தமிழ் சினிமாவில் முக்கியமான வினியோகஸ்தராக இருந்த கேயார், சிறு
    முதலீட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கித் தயாரிக்க முடிவு செய்திருந்தார் கேயார். அவர் முதன் முதலாக மலையாள படம் ஒன்றை இயக்கி இருந்தார். அதில் ஏகப்பட்ட பிரச்னை.

     ஈரமான ரோஜாவே

    ஈரமான ரோஜாவே


    பிறகுதான் சினிமா வினியோகம் பக்கம் வந்தார். அவர் தமிழில் முதலில் தயாரித்து இயக்கிய படம், ஈரமான ரோஜாவே. சிவா, மோகினி, நாசர், ஶ்ரீவித்யா, வெண்ணிற ஆடை மூர்த்தி உட்பட பலர் நடித்திருந்த படம். இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
    இனியான காதல் கதையை கொண்ட இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள், இப்போது பிரபல இயக்குனராக இருக்கும் எஸ்.பி.ஜனநாதனும், காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் இயக்குனர் பாலுவும்.

     புளியங்காய்

    புளியங்காய்

    இந்தப் படத்தின் ஹீரோவை தேர்வு செய்தவர்களில் இவர்கள் பங்கும் அதிகம். பல கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரிக்கு வெளியே நான்கைந்து மாணவர்கள், புளியமரத்தை நோக்கி புளியங்காய்க்கு கல்லால் குறி வைத்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரைப் பார்த்ததும் அவரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று ஜனநாதனும் பாலுவும் முடிவு செய்தார்கள். அவரிடம், விஷயம் சொல்லாமல், உங்க பேர் என்ன என்று மட்டும் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அவர் பெயர் சுப்பிரமணியன்!

     அதே சுப்பிரமணியம்

    அதே சுப்பிரமணியம்

    இதற்கிடையே கேமராமேன் நம்பியும் அவர் அசிஸ்டென்ட்டும் கல்லூரிக்குச் சென்று, ஹீரோ தேடுகிறோம், கல்சரல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களை பார்ப்பதற்காக, அவர்கள் எடுத்திருந்த வீடியோ கேசட்டை கேட்டார்கள். அதில் அவர்களும் ஒருவரை தேர்வு செய்தார்கள். ஜனநாதன் வெளியே பார்த்த அதே சுப்பிரமணியனைதான், அவர்கள் தேர்வு செய்ததும். கேயார் அவரை ஓகே சொல்ல, அந்த சுப்பிரமணியன் தான் பிறகு சிவா ஆனார்.

     இயக்குனர் ஜனநாதன்

    இயக்குனர் ஜனநாதன்

    இதுபற்றி இயக்குனர் ஜனநாதனிடம் கேட்டபோது, 'அது உண்மைதான். பல கல்லூரிகள்ல போய் ஹீரோவை தேடினோம். அப்ப மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் போகும்போது கல்லூரிக்கு வெளியே புளியங்காயை கல்லால எறிஞ்சிட்டிருந்தாங்க கொஞ்ச மாணவர்கள். அதுல ஒருத்தரை நாங்க கணிச்சோம். கேயார் சாரும் ஓகே சொன்னார். அப்படிதான் சிவா ஹீரோ ஆனார் என்றார்.

    English summary
    This is how the hero of Eramana Rojave had found for that film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X