கிரேக்க படம், கொரிய சீரியல்.. ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? பிரபல நடிகை விளக்கம்!

By

மும்பை: ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தது எப்படி என்று நடிகை நீது சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை நீது சந்திரா. தமிழ், தெலுங்கு, போஜ்புரி உட்பட சில மொழிகளில் நடித்துள்ளார்.

சில படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். டேக்வாண்டோவில் பிளாக்பெல்ட் வாங்கியவர் இவர்.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு சில படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் மேலும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

நெவர் பேக் டவுன்

நெவர் பேக் டவுன்

மார்ஷியல் ஆர்ட்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹாலிவுட் படம், நெவர் பேக் டவுன். ஜெஃப் வாட்லோ இயக்கிய இந்தப் படத்தில் சீன் ஃபாரிஸ், அமெர் ஹெட் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வரவேற்பை பெற்றன.

கிரேக்க படம்

கிரேக்க படம்

இப்போது இதன் நான்காம் பாகம் உருவாகிறது. இதற்கு நெவர் பேக் டவுன்: ரிவோட் என்று டைட்டில் வைத்துள்ளனர். கெல்லி மாடிசன் இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நீது சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே கிரேக்க படம் ஒன்றில் நடித்துள்ள அவர், கொரிய சீரியலிலும் நடித்துள்ளார்.

தரத்தை நம்புகிறேன்

தரத்தை நம்புகிறேன்

இதுபற்றி நீது சந்திரா கூறும்போது, '2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் பயணிக்கத் தொடங்கினேன். அந்தப் பயணம் வெளிநாட்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. நான் எப்போதும் அளவை விட தரத்தை நம்புகிறேன். தங்களை பிராண்டாக மாற்ற என்னைப் போன்றவர்களுக்குத் தெரியவில்லை.

இது ஆரம்பம்தான்

இது ஆரம்பம்தான்

ஆனால், உழைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. மிகவும் கடினமாக உழைப்பதும் எங்களுக்குத் தெரியும். அந்த உழைப்பு ஹாலிவுட் வாய்ப்புகளை தரும் என்பது என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. இப்போது அது நடக்கிறது. இது ஆரம்பம்தான். இவ்வாறு நீது சந்திரா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X