என்ன தலைவரே ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா? #kaala
Recommended Video

சென்னை: ரஜினியின் பேச்சை கேட்ட மக்கள் என்ன சார் ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா என்று கேட்கிறார்கள்.
காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அமர்க்களமாக பேசினார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அரசியல் அறிவிப்பை மட்டும் வெளியிடவில்லை.
இயக்குனர் ரஞ்சித்தை புகழ்ந்து தள்ளினார் ரஜினி. ரஜினியா இது என்று வியக்க வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி கூறியதாவது,

ரஞ்சித்
காலத்திற்கேப நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது என் மகள் சவந்தர்யா வந்து அப்பா நான் கோவா படம் பண்ணியபோது உதவியாளராக இருந்த ரஞ்சித் என்பவர் டான் கதை வைத்திருக்கிறார், கேட்கிறீர்களா என்றார். டான், அன்டர்வேர்ல்டு என்று சொன்னவுடன் எனக்கு வேண்டாம் என்றேன்.

டான்
இல்லப்பா இது மலேசியா அன்டர்வேர்ல்டு என்றதும் என் காது பெருசாச்சு. ரஞ்சித்தை பார்த்தவுடன் பிடித்திருந்தது. நான் மலேசியாவில் இருந்தேன். என் கதைக்கு வெயிட்டான ஹீரோ வேண்டும். எந்த மாதிரி ஹீரோ கிடைக்கிறார் என்பதை பார்த்து நான் கதை பண்ண வேண்டும் என்றார்.

செம வெயிட்டு
நான் வெயிட்டா என்று கேட்டேன். சார் நீங்க செம வெயிட்டு என்றார். நானும் ஓகே என்றேன். கதை ரெடி பண்ண 15 நாட்கள் கேட்டார். 20 நாட்கள் ஆகியும் வரவில்லை. எனக்கு சொன்ன தேதி, நேரம் சரியாக இருக்க வேண்டும். அதன் பிறகு சவுந்தர்யா கேட்டதற்கு 15 நாட்கள் என்பதை மறந்துவிட்டேன், சாரி என்று கூறி ரஞ்சித் வந்து என்னை சந்தித்தார்.

திருப்தி
எல்லாம் ரெடி செய்துவிட்டேன் ஆனால் திருப்தி இல்லை சார். ஏதோ மிஸ் ஆகிறது. இது உங்களுக்கு இன்னொரு படம். நான் 3 படங்கள் தான் செய்துள்ளேன். எனக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு என்றார். அதை கேட்டவுடன் இவர் தான் இயக்குனர் என்று முடிவு செய்துவிட்டேன். இவர் சந்தர்ப்பவாதி இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அவருக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது என்றார் ரஜினி.

நேரம்
சொன்ன தேதி, நேரம் முக்கியம் என்கிறீர்கள் ரஜினி சார் ஆனால் அரசியலுக்கு எப்பொழுது வருவீர்கள் என்பதை தெளிவாக சொல்லாமல் மக்களை குழப்புவது மட்டும் சரியா. அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறிவிட்டு நான் இன்னும் முழு அரசியல்வாதியாகவில்லை என்கிறீர்கள். தேதி, நேரம் காலத்தில் உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா சார்.


Click it and Unblock the Notifications











