ஆண்கள் மீது பாலியல் குற்றம்சாட்டுவது மீரா மிதுனுக்கு இது முதல் முறையல்ல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது மீரா மிதுன், தவறான எண்ணத்தில் அவர் தன்னை தொட்டதாக கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாருடனும் ஒத்துப்போகாத கேரக்டர் என்றால் அது மீரா மிதுன்தான். எல்லோரும் ஒரு வழியில் செல்ல அவர் மட்டும் தனி வழியில் செல்வார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை மட்டும் காட்டுவார்கள் அனைத்து கேரமராக்களும் தன்னை மட்டும்தான் படம் பிடிக்கும் என்ற நினைப்பு அவருக்கு. எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் பிரச்சனை செய்து கொலப்ஸ் செய்து மொத்த அட்டன்ஷனையும் தன் மீது திருப்ப வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

அவாய்ட் செய்த சேரன்
பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் சேரனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்தார் மீரா. சேரனும் மீரா மிதுனின் பிஹேவிங் பிடிக்காததால் அதிகம் பேசாமல் அவாய்ட் செய்து வந்தார்.

அசிங்கப்படுத்திய மீரா
இதனால் சேரன் மீது கோபத்தில் இருந்த மீரா எப்போது வாய்ப்பு கிடைக்கும் சேரனை அசிங்கப்படுத்தாலும் என்று காத்துக்கொண்டிருந்தார். அதேபோல கிடைக்கும் கேப்பில் எல்லாம் சேரனை அசிங்கப்படுத்தி வந்தார்.

சேரன் மட்டும் ஏன் வந்தார்?
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் டாஸ்க்கின் போது தனது வயிற்றில் சேரன் கையை வைத்தார். எந்த ஆண்களும் அங்கு வராத போது சேரன் மட்டும் ஏன் அங்கு வந்தார் என்று சேரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார் மீரா மிதுன்.

மீரா புகாரால் அதிர்ச்சி
இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சரவணன், மதுமிதா, முகென் உள்ளிட்ட மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் விளக்கி பேசிய போது மீரா மாற்றி மாற்றி பேசினார்.

ஜோடி நம்பர் ஓன்
மீரா இதுபோன்று ஆண்கள் மீது பொய்யாக பழி சுமத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா தன்னுடன் நடனமாடியவரை தள்ளிவிட்டு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

விரட்டப்பட்ட மீரா
இதனால் நிகழ்ச்சியில் இருந்து நடுவர்கள் மூலம் விரட்டியடிக்கப்பட்டார் மீரா மிதுன். ஆக எங்கு சென்றாலும் அங்குள்ள ஆண் மக்கள் மீது ஏதாவது ஒரு பொய் பாலியல் புகாரை கூறி, தன் மீது மொத்த பார்வையும் பட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் மீரா மிதுன்.
மலிவான விளம்பரம்
இதே வேலையைதான் தற்போது பிக்பாஸ் வீட்டில் இயக்குநர் சேரன் விஷயத்தில் செய்துள்ளார். பொய் பாலியல் குற்றச்சாட்டு கூறுவது மீரா மிதுனுக்கு இது ஒன்றும் புதிதல்ல, இதுபோன்ற மலிவான கீழ்தரமான விளம்பரங்களுக்கு அவர் ஏற்கனவே பழக்கப்பட்டவர்தான்.


Click it and Unblock the Notifications











