என் வாழ்நாளில் எடுத்த அற்புதமான ஷாட்..மேலும் சர்ச்சையை கிளப்பும் ராம்கோபால் வர்மா !

ஹைதராபாத் : இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், நேக்ட் படத்தின் ஒரு ஷாட்டை பகிர்ந்து இதுதான் என் வாழ்நாளில் நான் எடுத்த அற்புதமான ஷாட் என கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram

இந்தியாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பெயர் பெற்று வந்த இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்பொழுது சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான கிளைமாக்ஸ் மற்றும் நேக்ட் போன்ற படங்களை இயக்கி தனது சொந்த சேனலில் வெளியிட்டு கல்லாவை நிரப்பி வருகிறார்.

இயல்பான ஒன்றாக

இயல்பான ஒன்றாக

சினிமா துறையை பொறுத்த வரையில் ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும் யாராலும் கணக்கிடவே முடியாது. எனவே சினிமாவில் சில நேரங்களில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியையும் சில நேரங்களில் தோல்வியையும் பலரும் சந்தித்து வருவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது.

முக்கியமான உதாரணமாக

முக்கியமான உதாரணமாக

மிகப்பெரிய இயக்குனராக தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி சில சறுக்கல்களை சந்தித்த திரைப் பிரபலங்களும் இங்கு உண்டு. அதற்கு முக்கியமான உதாரணமாக இயக்குனர் ராம்கோபால் வர்மா இருக்கிறார் என்று கூறலாம். இந்திய அளவில் அமிதாப் பாச்சன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கி பல வசூலையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வந்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

முக்கிய படங்களான

முக்கிய படங்களான

கடந்த சில வருடங்களாகவே தனது வழக்கமான திரைப்படங்களை இயக்கும் ரூட்டை மாற்றி தற்பொழுது சர்ச்சைக்குரிய பல படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்கிய இரண்டு முக்கிய படங்களான கிளைமாக்ஸ் மற்றும் நேக்ட் போன்ற படங்கள் இன்றும் இந்திய திரைப்படத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

நல்ல வரவேற்பை

நல்ல வரவேற்பை

ஹாலிவுட் பார்ன் அக்ட்ரஸ் மியா மல்கோவாவை வைத்து கிளைமாக்ஸ் என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கி அதை தனது சொந்த சேனலின் மூலம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ராம்கோபால் வர்மா. கிளைமாக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் நேக்ட் என்ற படத்தையும் இயக்கி தனது சேனலில் வெளியிட்டு அது மிகப்பெரிய கலெக்சனை வசூலித்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் ராம்கோபால் வர்மா தெரிவித்திருந்தார்.

சிலரை முகம் சுளிக்கவும்

சிலரை முகம் சுளிக்கவும்

நேக்ட் படத்தின் சில சாம்பிள் காட்சிகளும், ட்ரைலர் காட்சிகளும் அனைவரையும் ரசிக்கவும் ஒரு சிலரை முகம் சுளிக்கவும் வைத்த நிலையில் தற்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேக்ட் படத்தில் வரும் ஒரு ஷாட்டை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு, என் வாழ்நாளில் நான் எடுத்த அற்புதமான ஷாட் இதுதான் என பெருமையுடன் கூறி இருக்கிறார்.

கேடுகெட்ட படங்கள்

கேடுகெட்ட படங்கள்

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர் ஒரு காலத்தில் நீங்கள் இந்தியாவில் மிகப் பெரிய இயக்குனராக வலம் வந்தீர்கள், உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஆனால் தற்போது இது மாதிரி கேடுகெட்ட படங்களை எடுத்து ஏன் இப்படி உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டு வருகின்ற நிலையில் பலரும் கடைசியாக ஒரே ஒரு நல்ல படத்தை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் ராம்கோபால் வர்மாவின் இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை தொடர்ந்து ரசித்தும் ஆதரித்தும் வருகிற ரசிகர்களும் இங்கு யாராலும் இருந்துதான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X