வேண்டுமென்று அரசியல் செய்கின்றனர்.. ரஜினி பட விழாவும் இங்குதான் நடந்தது.. விஜய் பேன்ஸ் கொந்தளிப்பு

பிகில் படத்திற்கு புதிய பிரச்சனையாக அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Recommended Video

Vijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ

சென்னை: பிகில் படத்திற்கு புதிய பிரச்சனையாக அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் இந்த விழா நடந்தது. அங்கு இருக்கும் லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது.

இந்த நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. யாரிடம் அனுமதி வாங்கி விழாவை நடத்துனீர்கள், என்று கேட்கப்பட்டது இருக்கிறது.

யார் கொடுத்தது

யார் கொடுத்தது

கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல்

அரசியல்

ஆனால் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் தனது பிகில் மேடையில் அரசியல் பேசினார். அவர் அரசுக்கு எதிராக பேசினார். அதனால்தான் இப்படி செய்துள்ளனர். இது விஜய்க்கு எதிரான நடவடிக்கை.

என்ன மோசம்

என்ன மோசம்

இங்கு நிறைய படங்களின் ஆடியோ விழாக்கள் நடந்து இருக்கிறது. ரஜினியின் "பேட்ட" ஆடியோ விழா இதே கல்லூரியில், இதே அரங்கத்தில்தான் நடந்தது. இன்னும் சில பெரிய ஹீரோக்களின் பட விழாக்கள் இங்குதான் நடக்கிறது.

இல்லை

இல்லை

அப்போது எந்த அடிப்படையில் அனுமதித்தனர் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. அன்று யாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. விஜய் என்பதால்தான் இப்படி செய்கிறார்கள், என்று அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

சண்டை

சண்டை

பிகில் படத்திற்கு முன்பே இதே போல் தெறி, கத்தி, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்களுக்கும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் பிரச்சனை செய்தது. இதன் காரணமாகவே அந்த படங்கள் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X