மார்க் ஆண்டனி படத்தில் பெருசா ஒண்ணும் இல்ல.. படம் ஓடக்காரணமே அஜித், விஜய் தான்.. பங்கம்பண்ணும் பேன்ஸ்!

சென்னை: மார்க் ஆண்டனி எல்லாம் ஒரு படமா, அஜித் விஜய் பெயரை பயன்படுத்தியே ரூ. 100 கோடி வசூலித்துவிட்டனர் என்று ரசிகர்கள் படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், அபிநயா, ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ்.ஜே சூர்யா,விஷால்,சுனில் என அனைவரது அட்டகாசமான நடிப்பிலும் படத்துக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தன.

This is tha reason for mark Antony success Netizens troll

இரட்டை வேடத்தில்: மார்க் ஆண்டனி படத்தில், விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வேடத்தில் மெக்கானிக்கான மார்க் ஆண்டனி, மற்றொரு வேடத்தில் ரவுடியான ஆண்டனி. எஸ் ஜே சூர்யாவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடத்தில் மார்க் ஆண்டனியின் தந்தை ஜாக்கி பாண்டியன், மற்றொரு வேடத்தில் மார்க் ஆண்டனியின் நண்பர் மதன் பாண்டியன்.

ரூ.100 கோடி வசூல்: இப்படத்தில் வரும் சில்க் ஸ்மிதாவின் காட்சிகள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துவிட்டது. மார்க் ஆண்டனி படம் முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இதுவரை எந்த ஒரு விஷால் படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் மார்க் ஆண்டனி படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.

This is tha reason for mark Antony success Netizens troll

அனைவருக்கும் நன்றி: இப்படம் வெற்றிப்பெற்றதை அடுத்து நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய விஷால், இது நியாயமான வெற்றி; பகத்சிங், கஜினி முகமது ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள், அவர்களைப் போல 16 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளேன். நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலையில் ரூ.1 ஐ தமிழ் நாடு விவசாயிகளுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

படத்துல ஒண்ணுமே இல்லை: மார்க் ஆண்டனி படம் 100 கோடி வசூலித்துள்ள நிலையில்,இந்த படத்தில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை, சொல்லப்போனால் படத்துல ஒண்ணுமே இல்லை, ஆனாலும் படம் ரூ 100 கோடியை வசூலித்திருக்கு என்றால்,அதற்கு காரணம், தளபதி விஜய்யின் பெயரையும், அஜித் குமாரின் பெயரையும் பயன்படுத்தி, இரண்டு ரசிகர்களையும் படத்திற்கு வரவைத்துவிட்டார் என்று இணையத்தில் ரசிகர்கள் மார்க் ஆண்டனி படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X