லாக்டவுனுக்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் தொடங்கினா அதை பண்ணணுமே.. பிரபல நடிகர் கவலை!

By

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கினால், அதை செய்ய வேண்டுமே என்பதுதான் கவலையாக இருக்கிறது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இரண்டு பாகமாக உருவாக இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இதில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம்

சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடிகர் ஜெயராமும் நடிக்கின்றனர். லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பற்றி ஜெயராம் கூறியிருப்பதாவது: இதன் 30, 40 சதவிகித ஷூட்டிங் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் பெரிய கதையை கொண்ட படம். நிறைய கேரக்டர்கள், போர்க்காட்சிகள் உள்ளன. பிரமாண்டமாக உருவாகும் இந்திய படம் இது.

அனுமதி கிடைக்கும்

அனுமதி கிடைக்கும்

லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பித்தாலும் நிறைய கூட்டத்தோடு ஷூட்டிங் நடத்த வேண்டும் என்பதால் எங்களுக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்பது தெரியவில்லை. நான் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடிக்கிறேன். இந்த கேரக்டருக்கு வழுக்கைத் தலையுடன் இருக்க வேண்டும். ஷூட்டிங் மீண்டும் தொடங்கினால், மொட்டை அடிக்க வேண்டுமே என்பதுதான் எனது பெரிய கவலையாக இருக்கிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

இந்த லாக்டவுனில் சென்னையில்தான் இருக்கிறேன். இந்த இக்கட்டானச் சூழலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று மற்றவர்களை போல நானும் பிரார்த்தனை செய்துவருகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகரான ஜெயராம், தமிழில், முறைமாமன், கோலங்கள், தெனாலி, பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி, உத்தமவில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X