ரஜினிக்கும், கமலுக்கும் இதுதான் வித்தியாசம்... இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என கூறியுள்ளார் தெரியுமா!
சென்னை: ரஜினி, கமல்,விஜய்,அஜித், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்
இப்பொழுது நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா படத்திலும் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தியிருப்பார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

எண்ணற்ற வெள்ளி விழா
தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, முத்து, அவ்வை சண்முகி, தசாவதாரம் என எண்ணற்ற வெள்ளி விழா படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார். ரஜினியுடன் முத்து, படையப்பா,லிங்கா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். ஜக்குபாய் ராணா உள்ளிட்ட படங்களிலும் ரஜினியை வைத்து இயக்கிய திட்டமிட்டிருந்த கேஎஸ் ரவிக்குமாருக்கு இந்த படங்கள் தொடங்க முடியாமலேயே போனது. இந்தநிலையில் படையப்பா 2 கதையே கேஎஸ் ரவிக்குமார் தயார் செய்து வருவதாகவும் ஒருபுறம் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது

நடிகராகவும் பல படங்களில் பிஸி
நடிகர் கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம், தெனாலி,தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் . கமர்சியல் படங்கள் மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைகளையும் இயக்க முடியும் என நிரூபித்து காட்டி இருப்பார். இதுவரை இயக்குனராக மட்டும் வலம் வந்து கொண்டிருந்த கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கூகுள் குட்டப்பா
அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆண்ராய்ட் குஞ்சப்பன் படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்து இருந்தார். கேஎஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் என்ற படத்தை இயக்க பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன் இதில் ஜோடியாக நடித்து இருப்பார்கள். மேலும் யோகி பாபு,மனோபாலா உள்ளிட்ட பல இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம்
தமிழ் சினிமாவில் இப்பொழுது உச்சத்தில் உள்ள ரஜினி மற்றும் கமல் இணை இருவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் கேஎஸ் ரவிக்குமார் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார். ரஜினி என்றால் மாஸ் கமல் என்றால் கிளாஸ். இரண்டு பேருக்கும் இரண்டு விதமான மைண்ட் செட் உள்ளது. இருவரும் நமக்கு இது தான் கரெக்டான ரூட்ன்னு செலக்ட் பண்ணிட்டாங்க. இவ்வாறு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கே எஸ் ரவிகுமார் இவ்வாறு பேசியுள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











