twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆழ்வார்பேட்ட ஆண்டவர் சொன்ன காதல் இதுதான்..பா.ரஞ்சித்தின் ’அட்டக்கத்தி’ பட நினைவுகள்..அழகான பதிவு

    |

    சென்னை: அட்டக்கத்தி படம் மூலம் பா.ரஞ்சித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

    பா.ரஞ்சித் சமூக அக்கறையுள்ள பல படங்களை இயக்கியுள்ளார், பல படங்களை தயாரித்து இருக்கிறார்.

    பா.ரஞ்சித் தன்னைப்போல சிந்தனையுள்ள மாரி செல்வராஜை பரியேறும் பெருமாள் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அனைவராலும் பேசப்பட்ட படம் அது.

    காதல் என்றால் என்ன அழகான பாடல்கள் இதோ

    காதல் என்றால் என்ன அழகான பாடல்கள் இதோ

    கமல்ஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் காதலில் தோல்வி அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படும் இளைஞரைப் பார்த்து கமல்ஹாசன் "ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையை கேளுடா" என்கிற பாடலை பாடுவார். அதில் காதல் என்றால் என்ன? இனக்கவர்ச்சி என்றால் என்ன? முழுமையான காதல் எப்போது வரும்? என்று பாடலின் வரிகள் வரும். மிக அழகான கருத்துக்கள் அந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும். இதேபோல் வானம்பாடி என்கிற பழைய தமிழ் படமொன்றில் போட்டிபாடல் பாடும் நாயகன் நாயகியிடம் "ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு என்று நாயகன் பாட அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது" என்பார் நாயகி.

    சினிமா காதலால் பாதிக்கப்படும் இளைய தலைமுறை

    சினிமா காதலால் பாதிக்கப்படும் இளைய தலைமுறை

    'திருடாதே' படத்தில் என்னருகே நீ இருந்தால் என எம்ஜிஆர்- சரோஜா தேவி பாடும் பாடலில் "இளமையிலே காதல் வரும்..எதுவரையில் கூட வரும்" என நாயகன் கேட்க "முழுமைப்பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும்" என நாயகி பாடுவார். இதே காதலுக்கு அழகான இலக்கணம் சொன்ன சினிமா படங்களில் காதல் என்றாலே பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போதே வந்துவிடவேண்டும் குடும்பம், வேலை, லட்சியம் என்பது பற்றி எல்லாம் கவலைப் படக்கூடாது என்பது போன்று எடுக்கப்படும் காட்சிகளால் இளைய தலைமுறை எது காதல் என்று அறியாமல் படிப்பு லட்சியம் அனைத்தையும் விட்டு விடுகின்றனர்.

    அட்டக்கத்தி படத்தில் சொல்லப்படும் காதல்

    அட்டக்கத்தி படத்தில் சொல்லப்படும் காதல்

    இளமையில் காதல் வரக்கூடாதா? என்று கேட்கலாம் இளமையில் காதல் வரவில்லை என்றால் அவன் மனிதனே அல்ல, அது இயற்கை சொல்லித்தரும் பாடம் ஆனால் வருவதெல்லாம் காதல் என்று எடுத்துக்கொண்டு படிப்பு, வேலை மற்ற விஷயங்களை பின்தள்ளிவிட்டு செல்வது சரியல்ல என்று கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள். இளம் வயதில் வருவது காதல் அல்ல அது இனக்கவர்ச்சி தான். காதல் என்பது வேறு என்றும் சொல்கிறார்கள் இதை அட்டைக்கத்தி படத்தில் அழகாக நகைச்சுவையாக எடுத்திருப்பார் பா.ரஞ்சித். அதிலும் ஹீரோவை வைத்து இதுபோன்று 'சட்டையர்' செய்து எடுப்பது சினிமாவில் புது வகை ரஞ்சித் அழகாக கையாண்டிருப்பார்.

    வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ரஞ்சித்

    வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ரஞ்சித்

    அட்டை கத்தி படம் இயக்குனர் பா ரஞ்சித்தின் முதல் படமாகும் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த பா ரஞ்சித் வெங்கட்பிரபுவை போல் கிரைம் கதைகளை எடுக்காமல் முற்றிலும் மாறுபட்டு இயல்பான எதார்த்தமான ஒரு கதையை தேர்வு செய்து நகைச்சுவையாக அதை காட்டியிருப்பார். இன்றைய சூழலில் இளைஞர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அட்டை கத்தி படத்தின் ஹீரோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது ஒன்றும் தவறான விஷயம் அல்ல ஆனால் இப்படித்தான் வாழ்க்கை செல்லும் ஈசியாக எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.

    அட்டக்கத்தி என்றால் என்ன? அதுதான் ஹீரோவின் குணம்

    அட்டக்கத்தி என்றால் என்ன? அதுதான் ஹீரோவின் குணம்

    இதில் குற்றச்சாட்டும் இல்லை, குறையும் இல்லை என்பதை அழகாக பதிவு செய்திருப்பார். ஏனென்றால் ஆழ்வார்பேட்டை ஆளுடா பாடலில் கூட கமல் இதைத்தான் சொல்லி இருப்பார். "ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்ன உன் லவ்வு மூணாம் சுத்துல முழுமையாகுமடா" என பாடுவார். பல காதலுக்குப் பிறகு ஒரு காதல் தெளிவாக வரும் அது தான் உண்மையான காதல் அதைத்தான் அட்டக்கத்தியில் பா.ரஞ்சித் பதிவு செய்திருப்பார். கதைப்படி ஹீரோ பள்ளி மாணவன் எளிய குடும்பம், தந்தை மதுபிரியர் மது அருந்தினால் என்ன பேசுவார் என்று தெரியாது. தாய்க்கு வீடு தவிர உலகமே தெரியாது. ஒரு அண்ணன் அவ்வளவாக பேசுவது கிடையாது. ஹீரோவுக்கு தனியாக ஒரு உலகம் அவருக்கு சில நண்பர்கள் அவர்கள் எண்ணம் எல்லாம் பார்க்கும் பெண்களை காதலிப்பது தான்.

    லவ் ஃபெயிலியர் ஆகும் தினேஷ் அடுத்த நொடியில் இன்னொரு பெண்ணிடம் லவ்

    லவ் ஃபெயிலியர் ஆகும் தினேஷ் அடுத்த நொடியில் இன்னொரு பெண்ணிடம் லவ்

    இதில் ஹீரோ தினேஷுக்கு அவ்வப்போது காதல் வரும். அந்த காதலில் பல நகைச்சுவை காட்சிகள் உண்டு. ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை ஹீரோ காதலிப்பார். ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்க இன்னொரு பெண்ணும் பார்க்க அதையும் காதலிக்க ஆரம்பிப்பார். அங்கு அடிவிழுந்ததும் விட்டுவிடுவார். பின்னர் இன்னொரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பார். ஆடிப்போனா ஆவணி பாடல் எல்லாம் பாடுவார், கடைசியில் அவர் அண்ணா என்று சொன்னவுடன் நொந்துப்போய் கோபமாக பஸ்சை விட்டு இறங்கி நிற்பார், அங்கு ஒரு பெண் அவரை பார்த்து சிரிக்கும் அவ்வளவுதான் அதை சைட் அடிப்பார்.

    ஐஸ்வர்யா ராஜேஷும் ஏமாற்றுவார்

    ஐஸ்வர்யா ராஜேஷும் ஏமாற்றுவார்

    இப்படியாக போகும் ஹீரோயின் கதையில் அவருடைய உறவினர் பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வருவார் அவர் முன்னால் அட்டகத்தி தினேஷ் சீன் போடுவார். நடுக்கடலில கப்பல இறங்கி தள்ள முடியுமான்னு காதலை நைசாக சொல்லிப் பார்ப்பார். அந்த பெண் தன்னை பெருமையாக நினைக்க இல்லாத சீன் எல்லாம் போட ஒரு நொடியில் அவருடைய அம்மா அதை அடித்து துவம்சம் செய்து விடுவார். திடீரென பார்த்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கடிதத்தை கொடுத்து உங்க அண்ணன் கிட்ட கொடுன்னு கொடுப்பார். அந்த காதல் கோட்டையும் இடிந்துவிடும்.

    ஒரு வழியாக கல்லூரி காலம் தொடங்கும்

    ஒரு வழியாக கல்லூரி காலம் தொடங்கும்

    ஒருவழியாக பிளஸ் டூவில் தோல்வியடைந்த சப்ஜக்ட் பாசாகி கல்லூரியில் சேர்ந்து சீனியராக இருக்கும்போது அவர் பேருந்தில் காதலித்த பெண் முதல் ஆண்டு படிப்பார். அவர் இவரது ஹீரோயிசத்தை பார்த்து நட்பாகி அவர் பெயரை சொல்லி சொல்லி பேசுவார், கடைசியில் பார்த்தால் அவர் உருகிய காதலர் பெயரும் ஹீரோ தினேஷ் பெயரும் ஒன்றாக இருக்கும். அந்த காட்சியில் தினேஷ் முகத்தை பார்க்கவேண்டுமே. ஒரு தகராறில் அவரை போட்டு அடித்து விடுவார்கள் ஒரு சராசரி இளைஞன் எப்படி இருப்பான் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் பா ரஞ்சித் பதிவுசெய்திருப்பார்.

    பா.ரஞ்சித்தின் எண்ணத்திற்கு ஏற்ப நடித்த தினேஷ்

    பா.ரஞ்சித்தின் எண்ணத்திற்கு ஏற்ப நடித்த தினேஷ்

    பா.ரஞ்சித்தின் மனதில் உள்ளதை தினேஷ் அழகாக தனது நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வந்திருப்பார். சின்னச் சின்ன தோல்விகள் சின்ன சின்ன அவமானங்கள் வாழ்க்கையில் வரத்தான் செய்யும் அதை கடந்து செல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள். அனைத்து பிரச்சனையும் முடிந்த நிலையில் ஒரு தினேஷ் மீது சைக்கிளில் வரும் பெண் மோத அங்கும் காதல் மலரும். பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஒரு வீட்டை காட்டுவார்கள் கணேஷ் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருப்பார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் அந்த குழந்தையின் தாயாக சைக்கிளில் வந்து மோதிய பெண் இருப்பார். குழந்தைக்கிட்ட இருந்து மிக்சர பிடுங்கி தின்பாயான்னு அவர் திட்டிக்கொண்டிருப்பார்.

    கடைசியில் காதல் சக்சஸ் ஆகி கல்யாணமும் ஆகிவிடும்

    கடைசியில் காதல் சக்சஸ் ஆகி கல்யாணமும் ஆகிவிடும்

    ஒரு வழியாக தினேஷ் காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்று செட்டிலாகிவிட்டார். படம் முழுவதும் நகைச்சுவை, நகைச்சுவை, நகைச்சுவையுடன் நகரும். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பிரேமும் அழகாக செதுக்கப்பட்டு இருப்பது போல் ஒவ்வொரு பாத்திரங்களையும் சிறப்பாக வடித்திருப்பார். நமது பார்வையில் இந்த படம் பா.ரஞ்சித்துக்கு ஏதோ முதல் படம் என்பது போல் இருக்காது. அவ்வளவு அழகாக காட்சியளிக்கும். எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத்தூண்டும் படமாக அட்டகத்தி படம் என்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் நடித்த தினேஷ் பின்னர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    10 ஆண்டுகள் பல சிறப்பான படங்களை தந்த பா.ரஞ்சித்

    10 ஆண்டுகள் பல சிறப்பான படங்களை தந்த பா.ரஞ்சித்

    பா. ரஞ்சித் இயக்கி 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இதற்கு பின் பா ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு படத்தை கார்த்தியை வைத்து எடுத்தார். சுவருக்காக நடக்கும் அரசியல் போட்டியில் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை அழகாக காட்டும் படம். அதற்குப் பின்னர் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என வரிசையாக திரைப்படங்களை ரஞ்சித் கொடுத்து வருகிறார். சொந்தமாக படம் தயாரிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் அவர் தயாரித்த படம். இது சாதிய வன்கொடுமைகள் அதையும் மீறி லட்சியம் படிப்பது ஒன்றுதான் கல்வி ஒன்று தான் உன்னை உயர்த்தும் என்கிற கருத்தை வலுவாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய படம்.

    மேலும் பல பத்தாண்டுகள் புதுமை காவியங்கள் படைப்பார் பா.ரஞ்சித்

    மேலும் பல பத்தாண்டுகள் புதுமை காவியங்கள் படைப்பார் பா.ரஞ்சித்

    திரைப்படத் துறையில் தன்னை தக்க வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் புதிய சமூக அக்கறை உள்ள இயக்குனர்களை அறிமுகப்படுத்திய போது பா ரஞ்சித் முன்னணியில் இருக்கிறார். அவரது நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் சமூக அக்கறையுள்ள படங்களும், அவர் இயக்கும் படங்களும் தமிழ் திரையுலகில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகின்றது. அட்டகத்தி படம் மூலம் திரைத்துறையில் காலடி வைத்து 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள ரஞ்சித் மேலும் பல பத்தாண்டுகளில் இத்துறையில் பல அரிய படைப்புகளை தருவார் என்று நம்புவோமாக.

    English summary
    It has been 10 years since Pa. Ranjith stepped into the film industry with Attakkaththi: அட்டக்கத்தி படம் மூலம் பா.ரஞ்சித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X