ரச்சிதா தினேஷை பிரிய காரணமே கடன் தான்.. நண்பர்கள் சொன்ன தகவல்!

சென்னை: ரச்சிதா மகாலட்சுமி தனது கணவரை பிரிய முக்கிய காரணமே கடன் தான் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்ததன் மூலம் தினேஷ்- ரச்சிதா மகாலட்சுமி இருவரும் காதலித்தனர்.

This is the main issue behind Rachitha Mahalakshmi and Dineshs divorce

முதல் தொடரிலேயே இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த ரச்சிதாவிற்கு அடுத்த வாய்ப்புகள் வந்தன.

இதையடுத்து ரச்சிதாவுக்கு சரவணன் மீனாட்சி தொடர் நல்ல பெயரை பெற்றுத்தந்தது, எத்தனை சீசன் வந்தாலும் ரச்சிதாதான் மீனாட்சி என பல ஆண்டுகளாக மீனாட்சியாகவே வாழ்ந்து வந்தார்.

காதல் திருமணம்: இதையடுத்து, காதலர் தினேஷை பெற்றோர் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தாலும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார் ரச்சிதா இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் தொடரில் நடித்தனர்.

காவல் நிலையத்தில் புகார்: இதற்கிடையே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தற்காலிகமான பிரிவு தான் இருவரும் விரைவில் இணைந்துவிடுவோம் என தினேஷ் தெரிவித்துவந்தார். ஆனால், ரச்சிதாவோ தன்னுடைய கணவர் தினேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பிரிவுக்கு முக்கிய காரணம்: இந்நிலையில் ரச்சிதாவின் நண்பர்கள் கூறியிருப்பது, ரச்சிதா மற்றும் தினேஷ் இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தர் அளவிற்கு அதிகமாக அன்பு வைத்து இருக்கிறார்கள். ரச்சிதா சீரியலில் பிஸியாக இருந்தார். ஆனால், தினேஷூக்கு வாய்ப்பு குறைந்தவிட்டதால், இயக்குநராக திட்டம் போட்டார். இது ரச்சிதாவிற்கு பிடிக்கவில்லை.

கடன் பிரச்சனை: இதையடுத்து, ஜீ தமிழ் சேனலில் தினேஷ் தயாரித்த நாச்சியார்புரம் தொடரில் இருவரும் நடித்தனர். ஆனால், அந்த சீரியல் பாதியில் நின்று விட்டதால், தினேஷ் கடனில் சிக்கிவிட்டார். கடன் கொடுத்தவர்கள் எல்லாம் தினேஷ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்கள். வழக்கில் ரச்சிதா பெயரையும் சேர்த்து விட்டார்கள். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமே இதுதான் என்று நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X