மாநிறம், பக்கத்து வீட்டு பையன் மாதிரி முகம்.. நிஜமா விஜய் பர்ஸ்ட் லுக் இதுதான்! #Thalapathy63FLDay
Recommended Video
சென்னை: தளபதி 63 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும், டைட்டில் இன்று வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கு முன்பு ஒவ்வொரு விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும்போதும் இணையதளத்தை தெறிக்கவிட்டனர் தளபதி ரசிகர்கள். இதற்கு முந்தைய சர்கார், மெர்சல், பைரவா படங்களின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்களும் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தன.
இன்று காலை முதலே, டிவிட்டரில், #Thalapathy63FLDay என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள், தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

முதல் லுக் இதுதான்
இப்படியெல்லாம் ஒரு பக்கம், விஜயின் பர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் ஏங்கி தவிக்கும் இந்த நிலையில், உண்மையிலேயே விஜயின் பர்ஸ்ட் லுக் எது என்பது குறித்து உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஆம், அது நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜய் கொடுத்த லுக்தான். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில், விஜய், கீர்த்தனா, ஸ்ரீவித்யா நடித்த திரைப்படத்தை, ஷோபா சந்திரசேகர் தயாரித்தார். மணிமேகலை இசையமைத்திருந்தார்.

படத்தில் தோன்றினார்
ஹீரோவாக விஜய்க்கு இதுதான் முதல் படம். இந்த படம் வெளியாகும்போது, பர்ஸ்ட் லுக் வெளியிடும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் கிடையாது. ஆனால், திரையில் முதல் முறையாக தோன்றியதுதான் முதல் லுக். அந்த வகையில், பக்கத்து வீட்டு பையன் மாதிரி தோற்றத்தில் இருக்கிறாரே, இதுதான் விஜயின் பர்ஸ்ட் லுக்.

மைனஸ், பிளஸ்சாக மாறியது
ஆரம்பத்தில், திராவிட நிலத்திற்கே உரிய வண்ணமும், பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றமும் அவரது மைனசாக பேசப்பட்டன. ஆனால், அந்த பக்கத்து வீட்டு பையன் இமேஜையே தனது பிளஸ்சாக அவர் மாற்றிய திரைப்படம், பூவே உனக்காக. இப்படத்தின் மெகா வெற்றி, தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா ஸ்டாராக விஜய் உருவாக அடித்தளம் போட்டு கொடுத்தது.

மறக்க முடியுமா
இப்படி அவருக்கு இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில், இமேஜை உருவாக்கிக் கொடுத்த அந்த பக்கத்து வீட்டு பையன் லுக்கை நாம் மறக்க கூடாதல்லவா. அதனால்தான், நாளைய தீர்ப்பை, இன்று நாம் நினைவுகூர்கிறோம்.


Click it and Unblock the Notifications











