ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. திடீரென பூமி பட ஸ்டில்கள் டிரெண்டாக இதுதான் காரணமாம்!
சென்னை: என்னடா திடீரென பூமி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகிறதே என யோசித்து வரும் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு, விரைவில் ஒரு ஹேப்பி நியூஸ் காத்துகிட்டு இருக்கு..
Recommended Video
இயக்குநர் லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள படம் பூமி.
கடந்த மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த இந்த படம் அதே கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப் போய்விட்டது.

ஒரு வருஷம் ஆகிடுச்சு
ஜெயம் ரவியின் பிளாக்பஸ்டர் படமான கோமாளி ரிலீசாகி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ஒரு வருஷம் ஆகிடுச்சு. ஏகப்பட்ட படங்களில் பிசியாக இருந்த நிலையில், இந்த பாழப்போன லாக்டவுன், இந்த ஆண்டு இந்நேரம் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்க வேண்டிய பல படங்களுக்கு எமனாக மாறி விட்டது.

நாசா விஞ்ஞானி
ரோமியோ ஜூலியட், போகன் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் மீண்டும் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை ருசி பார்க்க ஜெயம் ரவி நினைத்து நடித்துக் கொடுத்த படம் தான் பூமி. இந்த படத்தில், நடிகை ஹன்சிகா மட்டும் மிஸ்சிங், அவருக்கு பதிலாக நிதி அகர்வால் களமிறங்கி உள்ளார். இந்த படத்தில் நாசா விஞ்ஞானியாக ஜெயம் ரவி நடித்திருப்பது கூடுதல் தகவல்.

பிரத்யேக ஸ்டில்கள்
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவியின் பூமி படத்தில் இருந்து பல பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரொம்ப நாள் கழிச்சு ஜெயம் ரவி படத்தின், இதுவரை வெளிவராத புகைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் #Bhoomi என்ற ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்டிங்கிலும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

யாருடைய இழப்பு
தற்போது வெளியாகியுள்ள பிரத்யேக ஸ்டில்களில் ஒரு புகைப்படத்தில், ஜெயம் ரவியா? இது என அடையாளமே தெரியாத அளவில், நெருங்கிய ஒருவரின் மரணத்திற்கு வருந்தி வாடும் காட்சி வெளியாகி ரசிகர்களை உடனடியாக அந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலை தூண்டி வருகிறது.

ஏன் திடீர்னு
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், தற்போது திடீரென பூமி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை இந்த படத்தையும் OTTல் ரிலீஸ் பண்ணப் போறாங்களோ? என்ற அச்சம் ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவே தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளதாம்.

என்ன சர்ப்ரைஸ்
அப்படி என்னப்பா சர்ப்ரைஸ் சீக்கிரம் சொல்லுங்களேன் என கேட்கும் ஜெயம் ரவி ரசிகர்களுக்காக இதை சொல்றேன், இன்னும் 20 நாட்களில் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாள் வரும் செப்டம்பர் 10ம் தேதி வருகிறது. அந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் விதமாக பூமி படத்தின் பிரத்யேக பாடல் ஒன்றை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பது தான் அந்த சர்ப்ரைஸ் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயம் ரவி பிறந்தநாளைக்கு சீக்கிரம் காமன் டிபி ரெடி பண்ணுங்க ரசிகர்களே!


Click it and Unblock the Notifications











