பாவனிக்கும் தாமரைக்கும் அந்தளவுக்கு சண்டை நடக்க இது தான் காரணமா? தட்டிக் கேட்பாரா கமல்?

சென்னை: பசுமாட்டில் பால் கரக்க சொன்னா அந்த தெர்மாகோல் மாட்டை டார் டாராக கிழித்து விட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

ஆண்களையும் பெண்களையும் சும்மா கட்டிப் புரளவிட்டு சண்டை போட வைத்து அடுத்த கட்ட பிரச்சனைகளை ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ்.

தாமரை செல்வியும் பாவனியும் ஒருவரை ஒருவர் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வருவதை புரமோவில் பார்த்து இதை நம்பலாமா வேண்டாமா என குழம்பிய ரசிகர்களுக்கு அந்த சண்டைக்கான உண்மையான காரணம் என்ன என்பது ஷோவில் காட்டப்பட்டது.

செண்பகமே செண்பகமே

செண்பகமே செண்பகமே

செண்பகமே செண்பகமே எனும் டாஸ்க்கை கொடுத்து அழுது வடிந்து கொண்டிருந்த முகத்தையெல்லாம் ஆக்டிவான முகங்களாக மாற்றி உள்ளார் பிக் பாஸ். மாடு போனா போகட்டும் நமக்கு கன்டென்ட். கிடைச்சா போதும் என போட்டியாளர்களை ஆரஞ்சு மற்றும் நீல நிற அணிகளாக மாற்றி மோதவிட்டார் பிக் பாஸ்.

சட்டை பத்தல

சட்டை பத்தல

எல்லோருக்கும் எக்ஸ் எல் சைஸ் உடையை கொடுத்தால் சரியாக இருக்கும் என நினைத்து பிக் பாஸ் டீம் அனுப்பிய சட்டை ஆக்வாமேன் நிரூப்புக்கு பத்தல. 34 நாட்கள் ஆன பின்னரும் அவருடைய சைஸ் டபுள் எக்ஸ் எல் என்று பிக் பாஸ் குழுவுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான் ஆச்சர்யம். அதனால், கொடுத்த சட்டையே போடாமல் விளையாடினார்.

ஆக்ரோஷமான அக்‌ஷரா

ஆக்ரோஷமான அக்‌ஷரா

யாரிடமும் எந்த வம்புக்கும் தும்புக்கும் போகாமல் கத்தி பேசுற இடத்தில் எல்லாம் காணாமல் போவதே சிறந்தது என்கிற கொள்கைகளை இதுவரை கடைபிடிப்பது போல நடித்து வந்த அக்‌ஷரா இன்றைய பால் கரக்கும் டாஸ்க்கில் விட்டா சிபியையே தூக்கிப் போட்டு இருப்பேன் என சொல்லி விளையாடியது எல்லாம் வேற லெவல்.

பாவனிக்கும் தாமரைக்கும்

பாவனிக்கும் தாமரைக்கும்

பாவனி மற்றும் தாமரைக்கும் இடையே பாட்டில் பஞ்சாயத்து பாத்ரூம் ஏரியாவில் செம காரசார சண்டையாக வெடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கியது. இது டாஸ்க் சண்டை இல்லை என்றும் டாஸ்க்கின் காரணமாக வந்த சண்டை என்பதையும் ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

தண்ணீர் கலந்தாரா தாமரை

தண்ணீர் கலந்தாரா தாமரை

பசும்பாலோடு தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா என அண்ணாமலையில் இடம் பெற்ற பாடல் வரிகளை போல பாத்ரூமிற்குள் சென்ற தாமரை பால் பாட்டில்களுக்குள் தண்ணீரை நிரப்பி கொண்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாகத்தான் இந்த சண்டையை எழுந்தது.

குறும்படம் போட முடியாதே

குறும்படம் போட முடியாதே

மீண்டும் பாத்ரூம் ஏரியாவுக்குள்ளே பிரச்சனையை தாமரை கிளப்பிய நிலையில், இதற்கும் குறும்படம் போட முடியாதே என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அதற்காகத் தான் கடைசியில் வருண் தாமரை அணியினரின் அனைத்து பால் பாட்டிலும் கலப்படம் என்று குவாலிட்டி செக் செய்து சோலியை முடித்து விட்டார்.

விட்டா அடிச்சிருப்பாங்க

விட்டா அடிச்சிருப்பாங்க

தொடர்ந்து தாமரை செல்வி முரட்டுத் தனமாகவே பிக் பாஸ் வீட்டில் வாய் விட்டு வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், விட்டு இருந்தா பாவனியும் தாமரையும் கைகளை ஓங்கி வந்த நிலையில், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருப்பார்கள் என்றும் இது தவறான விஷயம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கமலுக்கான கன்டென்ட்

கமலுக்கான கன்டென்ட்

பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படி போட்டியாளர்களுக்கு நடுவே அடிதடி சண்டை வருவது போல ஒவ்வொரு சீசனிலும் ஒரு சீன் இடம் பெறுவது வழக்கம் தான். எந்த போட்டியாளரும் எல்லை மீறி சென்று விட மாட்டார்கள். தாமரையும் பாவனியும் போட்ட சண்டை கமல் சாருக்கான கன்டென்ட் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தாமரை வெளியே போகணும்

தாமரை வெளியே போகணும்

நமீதா மாரிமுத்து, இசைவாணி, இமான் அண்ணாச்சி, சுருதி, பாவனி என தொடர்ந்து தாமரை செல்வி சண்டை போட்டே இந்த சீசனில் பிரபலமாகி விடலாம் என நினைக்கிறார் என்றும் அவர் நிச்சயம் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்த வாரம் அபிநய் வெளியேறினால், அடுத்த வாரம் தாமரையை அனுப்பிடுங்க என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். தாமரை மீது எந்த தப்பும் இல்லை அவர் அவராகவே இருக்கிறார். நிச்சயம் மதுமிதா, ஐக்கி பெர்ரி உள்ளிட்ட போட்டியாளர்கள் இன்னமும் உள்ளே இருக்க அவர் ஏன் வெளியேற வேண்டும் தாமரை தான் டைட்டில் வின்னர் என்றும் ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X