ரேகாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டை நடக்க காரணமே நம்ம மொட்டை தல சுரேஷ் தான்.. நடந்தது இதுதான்!
சென்னை: புரமோவில் பார்த்த நடிகை ரேகா மற்றும் சனம் ஷெட்டியின் சண்டை காட்சி இன்றைய எபிசோடின் ஆரம்பத்திலேயே போடப்பட்டு பிக் பாஸ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஷிவானி நாராயணன், அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது சனம் ஷெட்டிக்கும் நடிகை ரேகாவுக்கும் சண்டை வெடித்துள்ளது.
கிச்சன் டீமை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி காய் கறிகளை வெட்டி இந்த சண்டைக்கு கொளுத்தி போட்டுள்ளார்.

ரேகா vs சனம்
16 பேருக்கு சமையல் செய்வது என்றால் சாதாரண விஷயம் கிடையாது. ஆனால், குக்கிங் டீமில் தான் எப்போதுமே சண்டை ஆரம்பிப்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி கைவிடாமல் தொடர்ந்து வருகிறது. கிச்சன் டீமை விட்டு சுரேஷ் சக்கரவர்த்தி கோபித்துக் கொண்டு நடந்ததை மெளனம் பேசியதே மீமாக போட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். இந்நிலையில், இப்போ சனம் vs ரேகா சண்டை அரங்கேறியது.

பஞ்சரான பஞ்சாயத்து தலைவர்
ரம்யா பாண்டியன் பஞ்சாயத்து பண்ண வந்த இடத்தில் பிரச்சனை பெரிதாக, நான் தான் குக்கிங் கேப்டன் என ரம்யா பாண்டியனிடமே எகிறி சூப்பரான சண்டையை அரங்கேற்றினார் நடிகை ரேகா. என்னாங்கடா பஞ்சாயத்து பண்ண வந்த பஞ்சாயத்து தலைவரையே இந்தம்மா பஞ்சாராக்கி விட்டதே, முரட்டு பீஸா இருக்கும் போல என ரசிகர்கள் அந்த காட்சியை அதிர்ந்து பார்த்தனர்.

காரணமே மொட்டை தான்
உப்புப் போட்டு திங்கிற எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என சொல்லிய மொட்டை தல சுரெஷ், மீண்டும் ஏன் சமையல் டீம் சண்டைக்கு சென்றார் என்கிற கேள்வியை ரம்யா பாண்டியன் எழுப்பியதும், அதற்கு சரியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்

சப்புன்னு
பெருசா சண்டை போகும் என பார்த்தால், வழக்கம் போல அப்படியே சமாதான பாதைக்கு கொண்டு போய் சப்புன்னு அந்த எபிசோடை முடித்து வைத்தார் பிக்பாஸ். என்னடா இதுவரை நம்ம அழுகினி அனிதாவை காட்டலையே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இறுதியாக ரேகா நடந்த விஷயம் குறித்து அனிதாவிடம் பேச, நீங்க எதுவா இருந்தாலும், நேரடியா பேசுங்க என செம நோஸ் கட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











