அஜித் பெயரில் இப்படியொரு மோசடியா? ஷாக்கான கோலிவுட்.. அதிரடி அறிக்கைக்கு இதுதான் காரணமாம்!
சென்னை: தல அஜித் பெயரை பயன்படுத்தி பிரபல கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக நடைபெற்ற மோசடி அம்பலமாகி உள்ளது.
நடிகர் அஜித்தின் வழக்கறிஞர் நேற்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், மேனேஜர் சுரேஷ் சந்திராவை தவிர வேறு யாரும் நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், அப்படி நடக்கும் மோசடிகளுக்கு அஜித் பொறுப்பாக மாட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்ன பிரச்சனை
தல அஜித்திடம் இருந்து திடீரென இப்படி ஒரு வக்கீல் நோட்டீஸ் வரக் காரணம் என்ன? தல 61 படம் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது தான் பிரச்சனையா? என புரியாமல் புலம்பி தவித்த ரசிகர்களுக்கு தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கல்லூரி சீட்
நடிகர் அஜித் பெயரை பயன்படுத்தி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுப்பதாக லட்சக் கணக்கில் மோசடிகள் நடைபெற்று வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விசயத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடிகர் அஜித், உடனடியாக இப்படியொரு அறிவிப்பை நேற்று வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

யார் செய்த வேலை
தல அஜித்தின் பழைய நண்பர்கள் மற்றும் பழைய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சிலர் தான் இப்படியொரு மோசடியை அஜித்தின் பெயரை பயன்படுத்தி செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனால், யாரும் ஏமாற வேண்டாம் என்றும், மேனேஜர் சுரேஷ் சந்திராவை தவிர வேறு யாரும் தனது பெயரை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார் அஜித்.

பைனான்சியர்களிடமும் மோசடி
மேலும், மற்றொரு நபர் தல அஜித்தின் அடுத்த படத்தை தான் தான் தயாரிக்கப் போகிறேன் எனக் கூறி பைனான்சியர்களிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்ய இறங்கி உள்ளதும் அஜித்திற்கு தெரிய வர உடனடியாக இப்படியொரு வக்கீல் நோட்டீஸை நடிகர் அஜித் வெளியிட்டு இருக்கிறார். மேலும், சினிமா துறையை சார்ந்தவர்களையும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் அஜித்.
Recommended Video

வலிமை ஷூட்டிங்
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தை முடித்து விட்டு தான் நடிகர் அஜித் அடுத்த படம் குறித்த முடிவை எடுப்பார் என்றும், அதற்கு முன்னதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வதந்திகள் தான் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











