குண்டானது பிரச்சனை இல்லையாம்.. அமீர்கான் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இதுதான் காரணமாம்!

சென்னை: கோலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் கலக்கி வரும் விஜய்சேதுபதிக்கு பாலிவுட்டில் அதுவும் அமீர்கான் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறியதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப் பட்ட நிலையில், தற்போது வதந்திகளுக்கு விஜய்சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வில்லன்னாலும் ஓகே

வில்லன்னாலும் ஓகே

ஹீரோவாக ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுக்கும் எந்த நடிகரும் வில்லனாக நடிக்க ஒத்துக்க மாட்டாங்க, ஆனால், விஜய்சேதுபதி ஒரு ரேர் பீஸ். நடிக்கணும், நல்ல கதாபாத்திரத்துல நடிக்கணும் அவருக்கு அது தான் வேண்டும். ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக கோலிவுட்டில் கலக்கிக் கொண்டு இருக்கும் போதே, தென்னிந்திய சினிமாக்களில் வில்லனாகவும் மிரட்டுகிறார்.

அமீர்கான் படத்தில்

அமீர்கான் படத்தில்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் தான் மிரட்டுகிறார் விஜய்சேதுபதி என்று பார்த்தால், மனுஷனுக்கு பாலிவுட்டில் அதுவும் அமீர்கான் உடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பே கிடைத்தது. சென்னைக்கு வந்த அமீர்கான் ஒரு நாள் காத்திருந்து விஜய்சேதுபதிக்கு அந்த படத்தின் கதையையும் சொல்லி ஒப்பந்தம் செய்தாராம். ஹாலிவுட்டில் வெளியாகி 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் தான் அந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்க்கு எட்டல

வாய்க்கு எட்டல

ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல என்பது போல அமீர்கான் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தும், விஜய்சேதுபதியால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அமீர்கான் படத்தில் இருந்து விஜய்சேதுபதி திடீர் விலகல் என்கிற தகவல் ஏகப்பட்ட வதந்திகளை கிளப்பின.

குண்டாகிட்டார்

குண்டாகிட்டார்

அமீர்கான் படத்திற்காக 20 கிலோ வரை விஜய்சேதுபதி எடையை குறைத்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்சேதுபதி லால் சிங் சத்தா படத்தில் இருந்து விலகியதற்கு, அவரது உடல் எடை இந்த லாக்டவுனில் அதிகமாக ஏறிவிட்டதே காரணம் என்ற வதந்தி தான் விஸ்வரூபம் எடுத்து சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுதன் காரணம்

இதுதன் காரணம்

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி, நான் குண்டானது பிரச்சனை இல்லை. இப்படியொரு அரிய வாய்ப்பை மிஸ் பண்ண காரணம் கொரோனா தான் என நடிகர் விஜய்சேதுபதி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமீர்கான் படத்திற்கு அவர் கொடுத்த கால் ஷீட் எல்லாம் கொரோனாவே முழுங்கிடுச்சாம்.

டோலிவுட்டில் பிசி

டோலிவுட்டில் பிசி

மேலும், டோலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடிக்க விஜய்சேதுபதி கால்ஷீட் ஒதுக்கியதால், தொடர்ந்து அமீர்கான் படத்துக்கு தன்னால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்றும் அந்த பேட்டியில் நடிகர் விஜய்சேதுபதி விளக்கி உள்ளார். கூடிய விரைவில் அமீர்கான் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தால் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X