திடீரென கவின் ஹாஷ்டேக் டிரெண்டாக இதுதான் காரணமா? கவினுக்கு லாஸ்லியா ஆர்மியும் சப்போர்ட்!

Recommended Video

Bigg Boss Kavin Losliya : ரசிகர்களின் ஆசை-வீடியோ

சென்னை: பிக்பாஸ் கவின் குறித்த ஹாஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருவதற்கு காரணம் இந்தியளவில் நடைபெறும் பிக்பாஸ் போட்டியாளர்களின் பட்டியலில் கவின் பெயரும் இடம்பெற்றுள்ளது தானாம்.

இந்தியன் சினிமா போல் நடத்தி வரும் 2019ம் ஆண்டின் சிறந்த டிவி பிரபலம் யார் என்ற போட்டியில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினுக்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 13 போட்டியாளர் அசிம் ரியாஸுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில், எப்படியாவது கவினை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் கவின் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் #2020isyoursKAVIN ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யார் யார்?

யார் யார்?

பிக்பாஸ் சீசன் 13 போட்டியாளரான அசிம் ரியாஸ், பெண் போட்டியாளர் ஷெனாஸ் கில், சித்தார்த் சுக்லா மற்றும் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர் கவின் ஆகிய 4 பேர் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

யார் டாப்

இதுவரை இந்த போல் போட்டியில் இந்தி பிக்பாஸ் போட்டியாளர் அசிம் ரியாஸ் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தமிழ் போட்டியாளர் கவின் உள்ளார். 3வது இடத்தில் சித்தார்த் சுக்லாவும் 4ம் இடத்தில் ஷெனாஸ் கில்லும் உள்ளனர்.

மாஸ் டிரெண்டிங்

ஒரு லட்சம் ட்வீட்களோடு காலை முதல் மாலை வரை கவின் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. 2020ம் ஆண்டு கவினுடைய ஆண்டு என கவின் ரசிகர்கள் அவருக்கு அடுத்த ஆண்டு வெற்றிகள் குவிய வாழ்த்தி வருகின்றனர்.

கோல்டு மெடல்

சமீபத்தில் பிஹைண்ட் வுட்ஸ் நடத்திய விருது விழாவில் நடிகர் கவுனுக்கு கோல்டு மெடல் விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்டு வரும் கவின் ஆர்மி இந்த ஹாஷ்டேக்கை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் வீடியோ

அதே போல பிக்பாஸ் சீசன் 3ல் கவினின் பெஸ்ட் மொமெண்ட்ஸ் வீடியோக்களையும் கவின் ஆர்மி தொடர்ந்து ஷேர் செய்து வைரலாக்கி வருகிறது.

அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்

அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர் தல, அடுத்த ஆண்டு உன்னுடைய சக்சஸை பார்க்க நாங்க வெயிட்டிங் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

லாஸ்லியா ஆர்மி சப்போர்ட்

கவின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருவதற்கு லாஸ்லியா ஆர்மியும் ஒரு காரணமாக இருக்கிறது. தொடர்ந்து லாஸ்லியா ரசிகர்களும் கவின் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X