‘பீஸ்ட்’ தோல்விக்கு இதுதான் காரணம்… இணையத்தில் வெளியான தகவல் !

சென்னை : நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஏப்ரல் 13ந் தேதி வெளியானத் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ,யோகிபாபு, ஷான் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து வெற்றியை வாரிக்குவித்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டாக்டர் படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

இரண்டு திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு தளபதியின் பீஸ்ட் திரைப்படம் வெளியானதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. அதுமட்டும் இல்லாமல், அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான ஆவலை மேலும் தூண்டின.

கூர்கா காப்பியா?

கூர்கா காப்பியா?

இதையடுத்து,பீஸ்ட் படத்தின் டிரைலர் ரிலீசானதும், அதில், தீவிரவாதிகள் ஒரு மாலுக்குள் நுழைந்து மாலில் இருப்பவர்களை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக் கொள்கிறார்கள். அவர்களை விஜய் காப்பாற்றுகிறார் என்பது தெரிந்ததும் ரசிகர்கள் படத்தை விமர்சிக்கத் தொடங்கி இது யோகிபாபு நடித்த கூர்கா படத்தின் காப்பி என்று கிண்டல் அடித்தனர்.

எதிர்மறை விமர்சனம்

எதிர்மறை விமர்சனம்

இதையடுத்து, ஏப்ரல் 13ந் தேதி படம் வெளியானதும் ரசிகர் பல நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்தனர். பீஸ்ட் படத்தில் ஹீரோ, பாட்டு, சண்டை, எடிட்டிங், மெகா தயாரிப்பு என எல்லாம் இருந்தும் இயக்குனர் மட்டும் படத்தில் இல்லை என்று பலர் இணையத்தில் பங்கமாக கலாய்த்தனர். இப்படி படம் வெளியானது முதலே பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும், சன் பிக்சர்ஸ் படம் பிளாப் என்ற அறிவிக்காமல் உள்ளது.

பீஸ்ட் வசூல்

பீஸ்ட் வசூல்

இணையத்தில் தற்போது, பீஸ்ட் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது இது விஜய்யின் மாஸ்டர் படத்தை விட 20 கோடி குறைவு என்றும், பிகில் மற்றும் சர்க்கார் படங்களை விட 10 கோடி குறைவு என்றும் கூறப்படுகிறது. மேலும் பீஸ்ட் திரைப்படம் தோல்வியை சந்திக்க எதிர்மறையான கருத்தும்,விமர்சனங்களுமே காரணம் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X